பிப்ரவரி மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?

February 2025 Monthly Career Horoscope In Tamil: பிப்ரவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த பிப்ரவரி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்களைக் காணக்கூடும்.

அதோடு கிரக நிலைகளின் மாற்றங்களினால் சில சுப மற்றும் ராஜயோகங்களும் உருவாகின்றன. இதன் விளைவாக சில ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களையும், இன்னும் சிலர் மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது 2025 பிப்ரவரி மாத கிரக நிலைகளால் தொழில் ரீதியாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

February 2025 Monthly Career Horoscope In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் தொழில் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். சில பிரச்சனைகளால் வேலையில் வெற்றி தாமதமாகலாம். இருப்பினும், நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு நல்ல நடத்தையால் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கை இம்மாதம் இனிமையாக இருக்கும். வேலையில் உங்களின் அர்ப்பணிப்பு நல்ல முன்னேற்றத்தைத் தரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சில சமயங்களில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது தொழில் ரீதியாக சலசலப்புகள் நிறைந்ததாக இருக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைப்பது முடியாத ஒன்றாக இருக்கும். அதற்காக சோர்வடைந்து கடின உழைப்பதை விடாதீர்கள். இம்மாதத்தில் தொழிலில் கூடுதல் கவனத்தை செலுத்துவது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் தொழில் ரீதியாக நல்ல வெற்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் வேலையை வெற்றிகரமாக முடித்து, நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் தங்கள் தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் பணப் பிரச்சனைகள் வந்தாலும், அதை குடும்பத்தினரின் உதவியால் சரிசெய்வீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் தங்கள் தொழிலைப் பற்றி சற்று கவலைப்பட நேரிடும். பணியிடத்தில் உங்களால் திறம்பட முடிவெடுக்க முடியாது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இந்த மன உளைச்சலைத் தவிர்க்க நல்ல ஆலோசகரை சந்தித்து முடிவை எடுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் தொழிலில் நிதி நிலை காரணமாக நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். எந்த ஒரு தவறான முடிவும் உங்கள் கடின உழைப்பு முழுவதையும் கெடுத்துவிடும். எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட்டு எந்த முடிவையும் எடுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் கடின உழைப்பு நிறைந்ததாக இருக்கும். இந்த கடின உழைப்பால் உங்களின் தலைவிதியே மாறலாம். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் பேச்சில் கட்டுப்பாட்டை வைத்திருங்கள். இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் மூலம் உங்களின் வேலையும் பாதிக்கப்படலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் நடத்தையால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்து, உங்களுக்கு பதவி உயர்வை வழங்கலாம். மொத்தத்தில், தொழில் ரீதியாக இம்மாதம் இனிமையாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக சிலர் சதி செய்யலாம். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இம்மாதத்தில் உங்கள் வேலையில் வெற்றி பெற வேண்டுமானால், கடுமையாக உழைக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion