Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
பிப்ரவரியில் இந்த 4 ராசிகளுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
February 2025 Lucky Zodiac Signs In Tamil: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகங்களும் ஒருகுறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இதனால் தான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த பிப்ரவரி மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக பிப்ரவரியில் புதன் 2 முறை ராசியை மாற்றவுள்ளார். மேலும் குரு பகவான் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலேயே, அதாவது பிப்ரவரி 04 ஆம் தேதி வக்ரமாகவுள்ளார். அதன் பின் பிப்ரவரி 11 ஆம் தேதி புதன் கும்ப ராசிக்கு நுழையவுள்ளார்.

இதனால் கும்ப ராசியில் புதன், சூரியன், சனி ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. அதன் பின்பு செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். மாத இறுதியில் மீண்டும் புதன் மீன ராசிக்கு செல்லவுள்ளார்.
இப்படி முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், பிப்ரவரி மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக தொழிலில் நல்ல வளர்ச்சியையும், நிதி நன்மைகளையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் .
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. முக்கியமாக கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். சிலருக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும் மற்றும் அவருடன் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பலவிதமான நன்மைகள் கிடைக்கப்போகிறது. குறிப்பாக ஊடகத் துறையில் இருப்பவர்கள் நல்ல வளர்ச்சியையும், எதிர்பாராத நிதி நன்மைகளையும் பெறுவார்கள். எதிரிகள் சிலர் உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். இருப்பினும், நீங்கள் அவர்களை தோற்கடித்து வெற்றி பெறுவீர்கள். புதிய வீடு வாங்கும் கனவு இருந்தால், பிப்ரவரி மாதத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் வாழ்க்கையில் இருந்த தடைகள் நீங்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனைக் கண்டு, உங்களுக்கு பதவி உயர்வை வழங்கலாம். சிலருக்கு பரம்பரை சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய கார், வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக புதிய தொழிலை தொடங்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், பிப்ரவரி மாதத்தில் அது நிறைவேறும். இம்மாதத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications