Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
February 2025 Horoscope: பிப்ரவரி மாதத்தில் 4 ராசிக்காரர்கள் பெரிய தோல்விகளை சந்திக்க போறாங்களாம்...!
February 2025 Horoscope: 2025 தொடங்கி அதற்குள் ஒரு மாதம் முடிந்து விட்டது. பிப்ரவரி மாதம் தொடங்கும்போது ஏற்படும் பல கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்கப்போவதில்லை, அதேசமயம் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் அற்புதமான மாதமாக இருக்கும்.
பிப்ரவரி மாதத்தில் நடக்கும் கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல பின்னடைவுகளை சந்திக்கப் போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் துரதிர்ஷ்டமான விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
இந்த மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை ஏற்படுத்தப்போகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது நபரைப் பற்றி பயப்படலாம், மேலும் இந்த பயம் உங்களை நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது. இருப்பினும், அதை எதிர்கொள்ளும் தைரியத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டால், இந்த சவாலை வெல்லலாம்.
மேலும் இந்த மாதம் ஒரு தற்காலிக நோய் ஏற்படலாம், எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். இந்த மாதம் மேலதிகாரிகளிடம் எந்த பிரச்சினையும் வைத்துக்கொள்ளமால் இருப்பது நல்லது.
கடகம்
இந்த மாதம், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் துரோகத்தை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் துணையிடம் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் தற்காலிக பிரிவினையை ஏற்படுத்தலாம். கூடுதலாக, குறிப்பாக இதயம் தொடர்பான ஆபத்தான பிரச்சினைகள் ஏற்படலாம் இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம்.
இந்த நேரத்தில் உங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். அலுவலகத்தில் உங்கள் எதிரிகளின் கை ஓங்கி இருக்கும், எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
துலாம்
இந்த மாதம் உங்கள் குடும்பத்தைப் பற்றிய கவலைகள் உங்கள் நிம்மதியைக் கெடுக்கும், இது உங்கள் சிரமத்தை அதிகரிக்கலாம். பணியிடத்தில் நடக்கும் அரசியலும் உங்களுக்கு ஒரு சவாலாக மாறலாம், ஆனால் அதைத் தவிர்ப்பதற்குப் பதிலாக அதை எதிர்கொள்வது முக்கியம். உங்கள் உறவுகளில், நீங்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும், எனவே பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். கூடுதலாக, நீங்கள் குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், எனவே சீரான ஆரோக்கியத்தை உறுதிசெய்ய மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது அவசியம்.
மீனம்
பிப்ரவரி மாதம் மீன ராசிக்காரர்களுக்கு மிக முக்கியமான மற்றும் சவாலான மாதமாக இருக்கும், ஏனெனில் அவர்களின் ராசியில் நிறைய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அவர்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது. அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்து சுக்கு நூறாக சிதறும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் ஏமாற்றங்களும், பின்னடைவும் இருக்கும். நிதானமாக இருப்பது இந்த குழப்பமான நேரத்தைக் கடக்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
