Latest Updates
-
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..
30 ஆண்டுகளுக்கு பின் தீபாவளி நாளில் உருவாகியுள்ள சச ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கபோகுது..
Diwali 2024: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ப பலன்களை அளிப்பவராவார். இதனாலேயே சனி பகவான் என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கும். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் பயணிப்பார் மற்றும் இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் நுழைந்துள்ள சனி பகவான் சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இந்த சச ராஜயோகமானது 30 ஆண்டுகள் கழித்து தீபாவளி நாளில் நீடித்துள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கமானது 2025 ஆம் ஆண்டு வரை இருக்கும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது இந்த சச ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சச ராஜயோகத்தால் இனிவரும் காலம் மிகவும் அற்புதமாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் அருமையாக இருக்கும். மன உறுதியுடன் இருப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சச ராஜயோகமானது பல வெற்றிகளையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் கொண்டு வரும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளியூர் செல்லும் கனவு நனவாகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. உங்களின் செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். மனதளவில் வலுவாக இருப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சச ராஜயோகத்தால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அது நிறைவேறும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications