Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ராசிப்படி மோதிரம் அணிவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது தெரியுமா?
ராசிப்படி மோதிரம் அணிவதில் கூட சில கட்டுப்பாடுகள் உள்ளது. அதன் அடிப்படையில்... அஷ்டமாதிபதியை ராசிநாதனாகக் கொண்டவர்கள் ராசிப்படி மோதிரம் அணிதல் கூடாது. அது தவறு... உதாரணமாக விருச்சிக லக்னம் மிதுன ராசியில் பிறந்தவர்கள் புதனின் மரகதத்தை மோதிரமாக அணிதல் கூடாது... அதேபோல, கன்னி லக்னம் மேஷ ராசியில் பிறந்த ஒருவர் பவளத்தில் மோதிரம் அணிதல் கூடாது.
இதற்குக் காரணம்... ஒருவருக்கு, கடக லக்னம், கடக ராசி. இந்நிலையில் அவருக்கு எட்டாம் இடம் என்னும் அஷ்டமஸ்தானத்தில் சனி அமர்ந்து காணப்படுகிறார். அவருக்கு சனி தசை ஆரம்பித்த நாலே வருடங்களில் தொழில் சரிவு ஏற்பட்டு விட்டது. உடன் குடும்பத்தினரும் கூட அவரை விட்டுப் பிரிந்து விட்டனர். இந்நிலையில், கையில் நீலக் கல் மோதிரம் அணிந்திருந்த அவர் கூறியதென்னவென்றால், சனி தசை நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக நீலக்கல் அணியும்படி ஒரு நகைக் கடைக்காரர் கூறியதாகக் கூறினார்.
'அவர் கூறியது தவறில்லை!... ஆனால், முறைப்படி எப்படி அணிய வேண்டும்?!'... என்று பாதிக்கப்பட்ட அவருக்கு அந்த நகைக் கடைக்காரர் சொல்லித் தரவில்லை. அதைத்தான் நாம் இந்தக் கட்டுரையில் விளக்கி சொல்ல போகிறோம்..

பொதுவாக, ஒருவர் எந்நிலையில் ராசிக்கல் அணியலாம். வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.....
1. லக்னப்படியும் ராசிப்படியும் நல்லது செய்ய விதிக்கப்பட்டிருந்த கிரகம் வலிமை குறைந்திருந்தால், அந்தக் கிரகத்துக்குரிய ராசிக் கல்லை அணிவது சிறப்பு.
2. 6, 8 க்குடையவர்களின் ராசிக்கல்லை அணிவதாக இருந்தால் இடது கை மோதிர விரலில் அணியலாம். பாதகாதிபதியின் ராசிக்கல்லும் அப்படியே.
3. லக்னாதிபதி வலிமை குறைந்திருந்தால், அவருடைய ராசிக்கல்லை வலதுகை மோதிர விரலில் அணிவது நல்லது. அவருக்கு ஆறு , எட்டு என மறு ஆதிபத்தியம் இருந்தால், லக்னாதிபதி இருக்கும் இடம், மற்றும் அவரது மூலத் திரிகோணாதிபத்தியம் ஆகியவற்றை வைத்து முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக, மோதிரம் போடும் அன்றைய தினத்தில் சந்திராஷ்டமம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, கரிநாள், அஷ்டமி, நவமி இல்லாமல் இருப்பது மிகச் சிறந்தது.
4. 5,9 போன்ற யோகாதிபதிகளின் தசை நடக்கும்போது அவர்களின் ராசிக்கல்லை தாராளமாக அணியலாம். அது சிறப்பான பலன்களைத் தரும்.
5. 2, 11, 4, 7, 10 ஆம் பாவங்களின் அதிபதிகள் சுபராகி அவர்களின் தசை நடந்தால், அவர்கள் இருக்கும் இடத்தின்படி ஆராய்ந்து மோதிரம் அணிதலே சிறப்பு. இந்நிலையில், இவ்விஷயத்தில் ஜோதிடரின் ஆலோசனை மிக முக்கியமானது.
6. ராகு கேதுக்களின் தசை நடக்கும்போது அவர்கள் இருந்த ராசியின் அதிபதி , லக்ன சுபராகி அவர் வலிமை குறைந்திருந்தால், அந்த ராகு கேதுக்கள் இருக்கும் ராசிக்கு அதிபதியின் கல்லை அணியலாம். அதிலும், ராகு கேதுக்கள் 3,11 ல் இருந்தால், மட்டுமே அவர்களின் ராசிக் கற்களை அணியலாம் அல்லது அவர்கள் லக்ன சுபரின் வேறு வீட்டில் இருந்தால் அணியலாம். உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 12 ல் ரிஷபத்தில் ராகு இருந்தால் கோமேதகம் அணியலாம்.
7. கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற, அதாவது கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற குருவும், புதனும், எந்த பாபர் பார்வையும் , சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருக்கும் நிலையில் அவர்களின் ரத்தினங்களை அணியக் கூடாது. இது பொது விதி.
8. மிதுன, கன்னி, ரிஷபம், துலாம் லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணிய வேண்டும். காரணம், வெள்ளி சுக்கிரனின் உலோகம். மகரம், கும்பம், கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்ச லோகத்தில் அணியலாம். அது அவர்களுக்கு நன்மையை செய்யும். அதேபோல, தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்கினக்காரர்கள் தங்கத்தில் அணியலாம். இதுவே அனுபவ முறை.
9. ரத்தினங்களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக்கூடாது. அவற்றை அணியப் போகிறவரின் ராசி, நட்சத்திரப்படி மந்திர உருவேற்றிய பின்பே, அது மோதிரமாக அணியப்பட வேண்டும். அப்படியாக அணியும் பட்சத்தில் அது மேலும் பல சிறப்பான பலன்களைத் தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications