Dhanteras 2025: தந்தேராஸ் நாளில் உங்க ராசிப்படி இத வாங்குங்க.. உங்க செல்வம் 2 மடங்கு அதிகரிக்கும்...

Dhanteras 2025: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது. பொதுவாக இந்த தந்தேராஸ் வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த தந்தேராஸ் தினம் மங்களரமான நாட்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு தந்தேராஸ் அக்டோபர் 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எப்படி தென்னிந்தியாவில் அட்சய திருதியை மங்களகரமானதோ, அதேப் போல் வட இந்தியாவில் தந்தேராஸ் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

சொல்லப்போனால் வடஇந்தியாவில் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் முதல் நாள் தான் தந்தேராஸ். இந்த தந்தேராஸ் நாளில் தான் ஆயுர்வேதத்தின் கடவுளாக கருதப்படும் தன்வந்திரி பிறந்தார். இந்நாளில் தன்வந்திரியை வணங்குவதோடு, தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கினால், அது பெருகும் என்பது ஐதீகம்.

Dhanteras 2025 What To Buy According To Zodiac Signs

இந்த சுப நாளில் எந்த புதிய பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தாலும், அது பெருகும் என்று நம்புகிறார்கள். மேலும் தங்களின் திறனுக்கு ஏற்ப தங்கம், வெள்ளி தவிர, பிற மங்களகரமான பொருட்களையும் மக்களும் வாங்குகிறார்கள். ஆனால் நம்பிக்கைகளின் படி, தந்தேராஸ் நாளில் ராசிக்கு ஏற்ப பொருட்களை வாங்குவது இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்போது தந்தேராஸ் நாளில் எந்த ராசிக்காரர்கள் எதை வாங்கலாம் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் வெள்ளை வாங்குவது நல்லது. ஒருவேளை வெள்ளி வாங்க முடியாவிட்டால், ஒரு புதிய பித்தளை பாத்திரத்தை வாங்கலாம். இது வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் தங்க நகைகளை வாங்குவது நல்லது. தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில், நினைத்ததும் தங்கம் வாங்குவது என்பது தற்போது இயலாத ஒன்றாகிவிட்டது. எனவே தங்கம் வாங்க முடியாவிட்டால், புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதை இந்நாளில் வாங்கலாம். இல்லாவிட்டால் ஏதேனும் உலோக சிலைகளை வாங்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் வெண்கல பாத்திரங்களை வாங்கலாம். இல்லாவிட்டால் இந்நாளில் மரகத ரத்தின கல்லையும் வாங்கி அணியலாம். இதனால் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளன்று லட்சுமி அல்லது விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது நல்லது. இல்லாவிட்டால் முத்துக்களை வாங்கலாம். இதுவும் வாழ்வில் செழிப்பை கொண்டு வரும்.

சிம்மம்

சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் தந்தேராஸ் நாளில் தங்க நகைகளை வாங்குவது நல்லது. ஒருவேளை அது வாங்க முடியாவிட்டால் ரூபி உலோகத்தை அணிவது அதிர்ஷ்டத்தைத் தரும். ஆனால் இரும்பினால் ஆன பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் வெண்கல பாத்திரங்களை வாங்குவது நல்லது. இல்லாவிட்டால் வீட்டிற்கு சில அலங்கார பொருட்களை வாங்கவும் செய்யலாம். இதுவும் நல்ல பலன்களைத் தரும்.

துலாம்

துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் தந்தேராஸ் நாளன்று வெள்ளி நகைகளை வாங்குவது நல்லது. முடிந்தால் வெள்ளியால் ஆன லட்சுமி கணேச சிலைகள் அல்லது லட்சுமியின் பாதத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு வரலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் செம்பு அல்லது வெண்கலத்தை வாங்குவது நல்லது. இந்த பொருட்களால் ஆன பாத்திரங்களை வாங்கி வீட்டில் கொண்டு வரும் போது, வறுமை நீங்கி, செல்வம் பெருகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளன்று தங்கம் அல்லது பித்தளை வாங்கலாம். இந்த நாளில் இவற்றால் ஆன பொருட்களை வாங்கும் போது, வீட்டில் செல்வம் குவியும் என்று கூறப்படுகிறது.

மகரம்

மகர ராசியைச் சேர்ந்தவர்கள் தந்தேராஸ் நாளில் பித்தளை பாத்திரத்தை வாங்கி, வீட்டிற்கு கொண்டு வருவது நல்லதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டு கஷ்டம் குறைந்து, வீட்டில் செல்வம் பெருகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளன்று வெள்ளி அல்லது செம்பு பாத்திரங்களை வாங்குவது நல்லதாக கூறப்படுகிறது. வெள்ளி வாங்க முடியாதவர்கள், செம்பு பாத்திரத்தை வாங்கினால் செல்வம் குவியுமாம்.

மீனம்

மீன ராசியைச் சேர்ந்தவர்கள் தந்தேராஸ் நாளில் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கலாம். இல்லாவிட்டால் விநாயகர், சரஸ்வதியின் உலோக சிலைகளை வாங்கி வீட்டிற்கு கொண்டு வரலாம். வாழ்க்கைத் துணைக்கு மரகதம் அல்லது வைர மோதிரத்தை வாங்கி கொடுக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, October 13, 2025, 14:30 [IST]
Desktop Bottom Promotion