Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சனி பிரதோஷ நாளில் வரும் தந்தேராஸ்: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும்!
Dhanteras 2025: தந்தேராஸ் வட இந்தியாவில் உள்ள இந்துக்களால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு தந்தேராஸ் அக்டோபர் 18 ஆம் தேதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தந்தேராஸ் கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்றே கூறலாம். ஏனெனில் இந்த ஆண்டு தந்தேராஸ் சனி பகவானுக்கு உரிய சனிக்கிழமையில், அதுவும் சனி பிரதோஷத்துடன் வருகிறது.
பொதுவாக தந்தேராஸ் நாளில் லட்சுமி தேதி, குபேரர் மற்றும் ஆயுர்வேதத்தின் கடவுளாக கருதப்படும் தன்வந்திரி ஆகியோரை மக்கள் வழிபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு தந்தேராஸ் சனிக்கிழமை மற்றும் பிரதோஷத்துடன் வருகிறது. இதனால் இந்நாள் கூடுதலாக சனி பகவானுக்கும், சிவபெருமானுக்கும் ஏற்ற நாளாகும்.

ஜோதிடத்தின் படி, தந்தேராஸ் செழிப்பைக் கொண்டு வரக்கூடிய பண்டிகையாகும். இந்நாளில் எதை வாங்கினாலும் அது பெருகும் என்பது ஐதீகம். இப்படிப்பட்ட தந்தேராஸ் நாளில் கிரகங்களின் நிலை மற்றும் சில அரிய சுப நிகழ்வுகளின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த ஆண்டின் தந்தேராஸ் நாளில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! தந்தேராஸ் நாளில் உங்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். சனி பகவானின் ஆசியால் நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இந்நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். இரும்பு தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! தந்தேராஸ் நாளில் சனி பகவானின் ஆசியால் உங்களின் நிதி நிலைமை வலுவடையும். உங்களின் நீண்ட கால திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆயினும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! தந்தேராஸ் நாளில் சனி பகவானால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பண பரிவர்த்தனைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் பல புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! சனி பகவானின் ஆசீர்வாதத்தால் நிதி நிலைமை வலுபெறும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் வீட்டிற்கு வாங்கும் பொருட்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். கடினமாக உழைத்தால், நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications