Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. டிசம்பர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
December 2025 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2025 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2025 டிசம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் புதிய வாய்ப்புகள் மற்றும் தைரியத்தின் மாதமாக இருக்கும். தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும். அதிக பொறுப்புணர்வுடன் இருப்பீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். இருப்பினும் உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
எண் 2
2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் உணர்ச்சிகள் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்வில் நிலையான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெறலாம். மனநிலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் அதன் விளைவு நேர்மறையாக இருக்கும்.
எண் 3
3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் படைப்பாற்றல் மற்றும் முன்னேற்றத்தின் மாதமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கருத்துக்கள் பாராட்டப்படும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
எண் 4
4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இம்மாதத்தில் கடின உழைப்பும், பொறுமையும் சோதிக்கப்படும். முடிவுகள் நேர்மறையாக இருக்கும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்ள நேரிடும். தம்பதிகளிடையே தவறான புரிதல்கள் தீர்க்கப்படும். நிதி நிலைமை மேம்படும்.
எண் 5
5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். வேலையில் மாற்றங்களை சந்திக்கலாம். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். இது எதிர்பாராத பலன்களைத் தரும்.
எண் 6
6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பை பெறுவீர்கள். பழைய பிரச்சனைகள் தீர்க்கப்படும். உணர்ச்சியில் சமநிலையை காண்பீர்கள். நிதி நிலையில் வளர்ச்சியைக் காணக்கூடும். வீட்டு சூழல் இணக்கமாக இருக்கும்.
எண் 7
7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் மாதத்தில் மன அமைதியைப் பெறுவார்கள். தொழிலில் மெதுவாக முன்னேற்றம் ஏற்படும். வாழ்வில் ஒரு திசையைக் காண்பீர்கள். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
எண் 8
8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பரில் வேலையில் பெரும் வெற்றிகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. கடின உழைப்பு சற்று அதிகமாக தேவைப்படும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கையில் தீவிரம் இருக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
எண் 9
9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் ஆற்றல், உற்சாகம் மற்றும் பெரிய முடிவுகளை எடுக்கும் மாதமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் உறவில் ஆர்வமும் ஈர்ப்பும் அதிகரிக்கும். சமூக தொண்டுகளை செய்ய வேண்டுமென்ற எண்ணம் திடீரென்று எழும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications