Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சின்ன வெங்காயமும், 2 ஸ்பூன் தேங்காயும் இருந்தா இந்த ஸ்பெஷல் சட்னியை அரைங்க...இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்!
Coconut Onion Chutney Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை சுட திட்டம் போட்டுருக்கீங்களா? இட்லி, தோசை என்றாலே எப்போதும், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் இந்த சின்ன வெங்காய தேங்காய் சட்னியை முயற்சி செய்து பாருங்கள்.
உங்கள் வீட்டில் தேங்காய், சின்ன வெங்காயம், வர மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு போன்ற பொருட்கள் உள்ளதா? அப்படியானால் இவற்றை வைத்தே சூப்பரான தேங்காய் சின்ன வெங்காய சட்னியை செய்யலாம். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 25 சின்ன வெங்காயம்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 8 வர மிளகாய்
- சிறு துண்டு புளி
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 4 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுத்தம் பருப்பு, வர மிளகாய் மற்றும் புளி சேர்க்கவும்.
- பருப்பு லேசாக பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பின்னர் கடாயில் உரிதத் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும்
- வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்கவும். வெங்காயத்தை மிதமான தீயிலேயே வதக்கவும்.
- அடுப்பை அணைத்து விட்டு, 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் துருவல் சேர்க்கவும்.
இதை முழுமையாக ஆறவைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் இதை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
- கடுகு வெடித்ததும் இதை சட்னி மீது ஊற்றி நன்கு கிளறினால் சுவையான தேங்காய் வெங்காய சட்னி ரெடி!
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications