Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
50 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Chaturgrahi Yog In Leo After 50 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது பல சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சிம்ம ராசியில் நான்கு கிரகங்களின் சேர்க்கையினால் சதுர்கிரக யோகமானது உருவாகவுள்ளது.
இந்த சுப யோகத்தின் போது கிரகங்களின் இளவரசன் புதனும், கிரகங்களின் தலைவன் சூரியனும், அசுரர்களின் தலைவனான சுக்கிரனும் மற்றும் சந்திரனும் சிம்ம ராசியில் இருப்பார்கள். இந்த 4 கிரகங்களும் சிம்ம ராசியில் பல ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இதனால் இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சிம்ம ராசியில் உருவாகவுள்ள சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் உதவியால் பல முக்கியமான வேலைகள் எளிதில் முடிவடையும். நீண்ட நாட்களாக வேலையில் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், இந்த யோக காலத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதோடு இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல வரன் தேடி வரும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இதன் விளைவாக வெற்றிகள் குவியும் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் இக்காலத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை எளிதில் அடைவார்கள் மற்றும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புக்கள் தேடி வரும். நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபராக இருந்தால், நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications