Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Chaturgrahi Yog 2025 In Pisces: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் 50 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த மங்களகரமான யோகமானது புதன், சனி, சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகவுள்ளது. இந்த சுப யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல செல்வத்தையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வையும், தொழிலதிபர்கள் நல்ல லாபத்தையும் பெறுவார்கள். இப்போது மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் கடக ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தொடர்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களைப் பெறலாம். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இதன் மூலம் நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெற வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட், மருத்துவம் மற்றும் உணவு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். தாயுடனான உறவு மேம்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் மற்றும் செயல்திறனும், திறமையும் நல்ல பாராட்டைப் பெறும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெறுவார்கள். உங்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் படைப்பாற்றலால் அலுவலகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். இதன் மூலம் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வேலைகளைத் தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications