Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
50 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது...
Chaturgrahi Yog 2024 After 50 Years In Leo: ஜோதிடத்தின் படி கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்கள் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இது தவிர, கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது சிம்ம ராசியில் உருவாகவுள்ளது. அதுவும் இந்த சுப யோகம் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் புதன், சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த சுப யோகத்தால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, வெற்றிகளும் குவியவுள்ளது. இப்போது சிம்ம ராசியில் உருவாகவுள்ள சதுர்கிரக யோகத்தால் நல்ல நிதி நன்மைகளைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் உங்களின் புகழ் கூடும். தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். நற்பெயர் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இக்காலத்தில் உங்களின் முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருப்பதால், உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பையும் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் பண வரவைப் பெறுவார்கள். நிதி ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். இதன் விளைவாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications