Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
1 வருடம் கழித்து சிம்மத்தில் உருவாகவுள்ள புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Budhaditya Rajyog In Leo On August 2024 After 1 Year: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் தற்போது சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே கிரகங்களின் இளவரசனான புதன் பயணித்து வருகிறார். இதனால் சிம்ம ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது பல சிறப்பான பலன்களை வழங்கவுள்ளது. இப்போது சிம்ம ராசியில் உருவாகவுள்ள புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வெற்றிகள் குவியும், நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக, உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்தும் லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். இதுவரை பிரச்சனை இருந்தால், அந்த பிரச்சனை முடிவுக்கு வரும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை தேடி வரும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் வெளிநாட்டில் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒவ்வொரு துறையிலும் வெற்றிகள் குவியும். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், இக்காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் போட்டியாளருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். இருப்பினும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் சிறு தவறு செய்தாலும், அது பெரிய இழப்பை ஏற்படுத்தும். ஆயினும், நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும. இருப்பினும், கண்களில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications