Latest Updates
-
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..
கடக ராசியில் உருவாகியிருக்கும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றிகள் குவியும்.. செல்வம் பெருகும்..
Budhaditya Rajyog In Cancer On July 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மட்டுமின்றி, கிரக சேர்க்கைகளும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் ஒவ்வொரு கிரகமும் மற்றொரு கிரகத்துடன் இணையும் போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஜூலை 16 ஆம் தேதி சந்திரனின் ராசியான கடக ராசிக்குள் நுழைந்தார். இந்த கடக ராசியில் ஏற்கனவே ஜூன் மாத இறுதியில் புதன் நுழைந்து பயணித்து வருகிறார். இதனால் கடக ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகமானது ஒரு மங்களகரமான யோகம் என்பதால், இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைப்பதோடு, தொழிலில் வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்கவுள்ளது. இப்போது கடக ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவதோடு, மரியாதையையும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் சமூகத்தில் நல்ல பெயரையும், புகழையும் பெறுவீர்கள். உங்களின் கௌரவம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எந்த ஒரு புதிய வேலையை தொடங்கினாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வரன் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கம். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றிப் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளை செய்தால் அல்லது ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபத்தை பெறக்கூடும். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். சிலர் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேச்சால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். மேலும் உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும்படி இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications