Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ரக்ஷா பந்தன் நாளில் நிகழும் நீல நிலவு: இந்த ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Blue Moon On Raksha Bandan 2024: கிரகங்களில் சந்திரன் 2 1/2-3 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும். இப்படி சந்திரனில் ஏற்படும் இரண்டு விதமான முக்கிய மாற்றங்கள் தான் அமாவாசை, பௌர்ணமி. மாதந்தோறும் இந்த அமாவாசையும், பௌர்ணமியும் 15 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். இப்படி சந்திரனின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 19 ஆம் தேதி மிகவும் அரிய வானியல் நிகழ்வான ப்ளூ மூன் என்னும் நீல நிலவு நிகழவுள்ளது. இந்த நீல நிலவு வருடத்திற்கு 2-3 முறை நிகழ்வதுண்டு. இந்த நீல நிலவின் போது சந்திரன் வழக்கத்தை விட மிகவும் பிரகாசமாக இருப்பதோடு, பெரியதாகவும் காணப்படும்.

இந்த அபூர்வமான நிகழ்வு ரக்ஷா பந்தன் நாளில் நிகழ்வதால், இது இன்னும் சிறப்ப்பு வாய்ந்தது என்றே கூறலாம். இதன் போது சந்திரன் கும்ப ராசியில் இருப்பார். அதே வேளையில் சனியும் கும்ப ராசியில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
நீல நிலவு எப்போது வானில் தெரியும்?
2024 ஆம் ஆண்டின் நீல நிலவு ஆகஸ்ட் 19 ஆம் தேதி மாலை 6.54 மணிக்கு சந்திரன் வானில் தெரியத் தொடங்கும். அப்போது சந்திரன் மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்குள் நுழைவார். மேலும் இரவு 11.56 மணிக்கு சந்திரன் உச்சக்கட்டத்தில், அதாவது மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த சந்திரன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 6.24 மணி வரை வானில் தெரியும்.
நீல நிலவின் போது சுப யோகம்
2024 ஆகஸ்ட்டில் நிகழும் நீல நிலவின் போது பல சுப யோகங்கள் உருவாகியிருப்பதால், ஜோதிடத்தின் படி இந்த நீல நிலவு காலகட்டமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்போது சந்திரன் கும்ப ராசியில் சனியுடன் இணைந்து இருப்பதோடு, சர்வார்த்த சித்தி யோகம், ஷோபன் யோகம், ரவி யோகம் ஆகியவற்றுடன் திருவோண நட்சத்திரமும் உருவாகிறது.
கிரக நிலைகளின் படி, இந்த காலத்தில் லட்சுமி நாராயண யோகம், புதாதித்ய யோகம், சுக்ராதித்ய யோகம் ஆகியவற்றுடன் சச யோகம், குபேர யோகமும் உருவாகின்றன. இப்படி பல சுப யோகங்கள் உருவாவதால், இந்த நீல நிலவு சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான நன்மைகளை வழங்கவுள்ளது.
அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, நீல நிலவு நாளில் பல சுப யோங்கள் உருவாவதால், மேஷம், கும்பம், மகரம், தனுசு, சிம்மம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்நாளில் எதிர்பாராத அளவில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். அதோடு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன், லாபத்தையும் பெறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
