பாபா வாங்கா கணிப்பு படி 2026-ல் இந்த 4 ராசிக்காரங்க கொடிகட்டி பறக்கப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

Baba Vanga's 2026 Prediction:'பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அடிக்கடி அழைக்கப்படும் பார்வையற்ற பல்கேரிய ஞானியான பாபா வங்கா ஒவ்வொரு வருடமும் பிறக்கும் போதும் கவனத்தின் மையமாக இருக்கிறார். இளவரசி டயானா மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் மரணங்கள், 9/11 தாக்குதல்கள் போன்ற முக்கியமான உலக நிகழ்வுகளை, அவர் முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது.

பாபா வங்கா, 1911 ஆம் ஆண்டு தற்போது வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்ட்ரூமிகாவில் வங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா என்ற பெயரில் பிறந்தார். அவர் தனது 12 வயதில் தனது பார்வையை இழந்தார். அவரை பின்பற்றுபவர்கள் இதை ஞான திருஷ்டியின் தொடக்கமாகக் கருதினர். 1970-கள் மற்றும் 1980-களில், மக்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து அவரிடம் ஆலோசனை கேட்டதால், அவர் பிரபலமானார். அவர் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தார் மற்றும் 1996 இல் தனது 85 வயதில் இறக்கும் வரை தனது கணிப்புகளை வழங்கி வந்தார். அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே 5079 ஆம் ஆண்டு வரை நடக்கவிருக்கும் நிகழ்வுகளை அவர் முன்னறிவித்ததாக பலர் நம்புகிறார்கள்.

Baba Vanga s 2026 Prediction These Zodiac Signs Achieve Massive Success in 2026

2025-ல் உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் பேரழிவுகள் ஏற்படும் என்று எச்சரித்திருந்த வாங்கா, 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வம் மற்றும் வெற்றியைத் தரும் என்றும் கூறியிருக்கிறார். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பாபா வாங்கா கணிப்பு படி 2026-ல் அளவில்லாத செல்வத்தை அடைவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

வரப்போகிற 2026-ல் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாகக் கை கொடுக்கும். அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். அவர்களின் மன உறுதி, கடின உழைப்பு மற்றும் புதிய திட்டங்கள் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களைக் கொண்டு வரும். இந்த ஆண்டு பெரும் சாதனைகள் மற்றும் அதிர்ஷ்டமும் தேடிவரும் நாளாக இருக்கும், குறிப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான வருடமாக இருக்கும்.

ரிஷபம்

சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்கு 2026 ஆம் ஆண்டு நிதிரீதியாக மிகவும் அதிர்ஷ்டமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் அவர்கள் அனுபவித்த அனைத்து போராட்டங்களும் இந்த ஆண்டு முடிவுக்கு வரும், அவர்களின் கடின உழைப்புக்கான பலன்கள் இறுதியாக இந்த ஆண்டு அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்திலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகும் அவர்களின் வங்கி கணக்கில் அபரிமிதமான வளர்ச்சியுடன், அவர்கள் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சங்களை எட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 2026 இந்த ஆண்டு அவர்களுக்கு அனைத்து நன்மைகளும் தேடிவரும் நாளாக இருக்கும்.

மிதுனம்

பாபா வாங்கா கணிப்பு படி கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை 2026-ல் பிரகாசமாக இருக்கபோகிறது. அவர்களின் புத்திசாலித்தனமான திட்டமிடலும், செயல்பாடுகளும் 2026-ல் அவர்களுக்கு அபரிமிதமான நிதிப் பலன்களைப் பெற்றுத் தரும். தொழில் வாழ்க்கை மற்றும் சமூகத் தொடர்புகள் விரிவடையும். புதிய முயற்சிகளைத் தொடங்க அல்லது முதலீடுகளைச் செய்ய இது ஒரு சிறந்த ஆண்டாக இருக்கும். அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் குணமும் கூர்மையான சிந்தனையும் திடீர் ஆதாயங்களுக்கு வழிவகுக்கும்.

சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள், 2026 ஆம் ஆண்டில் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பார்கள். ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கோ அல்லது அவர்களின் தற்போதைய வேலையில் உயர் பதவிக்குச் செல்வதற்கோ வாய்ப்புகள் தேடிவரும். அவர்களின் தலைமைப் பண்புகளும் தன்னம்பிக்கையும் நிதி வெற்றிக்கு வழிவகுக்கும். 2026-ல் அவர்களின் தேடிவரும் பல சாதகமான வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையின் திசையை முழுமையாக மாற்றக்கூடும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, December 24, 2025, 20:34 [IST]
Desktop Bottom Promotion