Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
ஆகஸ்ட் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசிக்கு எப்படி?
Career Horoscope For August 2024 In Tamil: 2024 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்ட் மாதத்தில் நுழையவுள்ளோம். கிரகங்களின் நிலைகளால் இம்மாதமானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதுவும் இம்மாதத்தில் புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழவுள்ளது.
இதனால் இந்த ஆகஸ்ட் மாதம் குறித்து பலருக்கும் பலவித எதிர்பார்ப்புகள் இருக்கும். முக்கியமாக வேலை செய்பவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருப்பார்கள்.

ஆகஸ்ட் மாத கிரக நிலைகளின் படி, இந்த மாதத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவார்கள் மற்றும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் பெறுவார்கள். அதே சமயம் சில ராசிக்காரர்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும். இப்போது 2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 12 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் தொழிலைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். இருப்பினும் கடினமாக உழைக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலம், வேலையில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். சிலருக்கு இம்மாதத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் கடின உழைப்பால் உங்கள் விதியே மாற வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாதத்தின் இரண்டாம் பகுதியில் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக உங்களின் வேலையும் பாதிக்கப்படலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த மாதத்தில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வேலையை மாற்ற நினைத்தால், விரும்பிய வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்து, பணியிடத்தில் நல்ல பதவியைப் பெறுவீர்கள். இந்த மாதமானது தொழில் ரீதியாக மிகவும் இனிமையாக இருக்கும். வேலையில் முழு அர்ப்பணிப்புடன் இருப்பதால், நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். இருப்பினும் கடின உழைப்புக்கான பலன் கிடைப்பது, சற்று சந்தேகம் தான். மேலும் வணிகர்கள் நல்ல ஒப்பந்தத்தைப் பெற எவ்வளவு முயற்சித்தாலும், வெற்றிக்கான வாய்ப்புகள் சற்று குறைவாகவே இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருந்தால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்கள் விரும்பிய வேலையைப் பெறுவார்கள். மேலும் இந்த மாதத்தில் ஒருவர் நல்ல வழிகாட்டியாக இருப்பார். அவரால் உங்கள் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் தொழிலில் நல்ல வெற்றிகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். கல்வி துறையில் முயற்சித்தால் நல்ல வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான நல்லுறவு மேம்படும். மேலும் உங்களின் நடத்தையால், உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இம்மாதம் இனிமையாக இருக்கும். உங்களின் அர்ப்பணிப்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்காது. உங்கள் வேலைகளில் வெற்றி கிடைக்க தாமதமாகும். எதிர்மறை எண்ணங்களை இம்மாதத்தில் நுழைய விடாதீர்கள். வெற்றி பெற முடிந்த முயற்சிகளை எடுங்கள். அப்படி மனம் தளராமல் முயற்சிகளை எடுத்தால், எதிர்காலத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். இருப்பினும் மாதத்தின் இரண்டாம் பாதியில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலையில் வெற்றியைப் பெற போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்படலாம். இதன் விளைவாக பலவிதமான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கலாம். உங்கள் பணியிடத்தில் வெற்றி பெற வேண்டுமானால், கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் தொழில் ரீதியாக சற்று கவலையாக இருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ப அலுவலகத்தில் உங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், நல்ல ஆலோசகரின் உதவியின் பேரில் முடிவை எடுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். எந்த ஒரு வேலையில் எடுக்கும் முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியால், முக்கியமான வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications