Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
August 2025 Numerology: உங்களோட பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
August 2025 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2025 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்ட் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2025 ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்த எண் கணித நிபுணர் நிதி குப்தாவின் கணிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். புதிய வேலை வாய்ப்புகள், தொழில் யோசனைகள் அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. உறவுகளைப் பொறுத்தவரை சீராக இருக்கும் மற்றும் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்கள் இந்த மாதத்தில் தங்கள் துணையை சந்திக்கலாம்.
பரிகாரம்: தினமும் காலையில் சூரியனுக்கு பால் மற்றும் சர்க்கரையை படைத்து வழிபாடு செய்யுங்கள்.
எண் 2
2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது அமைதியாகவும், சமநிலையாகவும் இருக்கும். ஆனால் இந்த மாதத்தின் கடைசி வாரம் உற்சாகமானதாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவார்கள். திருமணமாகாதவர்கள், தங்கள் சிங்கிள் வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து பொறுமையுடன் இருந்தால், துணையை சந்திக்கலாம்.
பரிகாரம்: ஆகஸ்ட் மாதம் சிறப்பாக இருக்க ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அரச மரத்திற்கு நீரை ஊற்றி வழிபாடு செய்யுங்கள்.
எண் 3
3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது நன்றாக இருக்கும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும், பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் மற்றும் மனநிலையும் நன்றாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும். திருமணமாகாதவர்கள் இந்த மாதத்தில் தங்கள் துணையை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
பரிகாரம்: ஆகஸ்ட் மாதம் நன்றாக இருக்க ஏழை எளியோருக்கு மஞ்சள் நிற இனிப்புக்களை தானம் செய்யுங்கள்.
எண் 4
4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் நல்ல முடிவுகளைப் பெறக்கூடும். இந்த மாதத்தின் முதல் வாரம் சற்று மந்தமாக, நீங்கள் சற்று சோர்வாக உணரலாம். ஆனால் உங்கள் கடிஉ னழைப்புக்கான பலன் விரைலி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் சிறிய மாற்றங்களை செய்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியடைவார்கள்.
பரிகாரம்: ஆகஸ்ட் மாதம் நன்றாக இருக்க, முடிந்த போதெல்லாம் சிவலிங்கத்திற்கு தண்ணீர் மற்றும் சர்க்கரையை படைத்து வழிபாடு செய்யுங்கள்.
எண் 5
5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதமானது பரபரப்பாகவும், பிஸியாகவும் இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். ஆனால் சில செலவுகளையும் சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும் என்பதால் உணவுகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை நன்றாகவும், இனிமையாகவும் இருக்கும். திருமணமாகாதவர்கள் புதிய உறவில் அவசரப்பட்டு நுழைவதைத் தவிர்க்க வேண்டும். உறவுகளில் பொறுமையை கையாள வேண்டும்.
பரிகாரம்: ஆகஸ்ட் மாதம் சிறப்பாக இருக்க, திருநங்கைகள் அல்லது திருமணமாகாத பெண்ணுக்கு பச்சை நிற ஆடைகளை தானம் செய்யுங்கள்.
எண் 6
6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் புதிய பணிகள், புதிய திட்டங்கள் மற்றும் எதிர்பாராத வாய்ப்புகள் போன்றவை அடுத்தடுத்து கிடைக்கும். வணிக வளர்ச்சி வலுவாகத் தோன்றினாலும், நீங்கள் சோர்வாக உணரலாம். உறவுகளைப் பொறுத்தவரை, துணையுடன் நல்ல நேரத்தை செலவிட முடியாமல் போகலாம். திருமணமாகாதவர்கள் ஒரு ஆழமான தோழமையை விரும்பலாம்.
பரிகாரம்: ஆகஸ்ட் மாதம் சிறப்பாக இருக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஆகஸ்ட் மாதத்தில் அடிக்கடி வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள்.
எண் 7
7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம்தொழில் ரீதியாக சமாளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும், சற்று மந்தமாகவே இருக்கும். பணியிடத்தில் கொடுக்கப்பட்ட இலக்குகளை சிரமப்படாமல் எளிதில் அடைவீர்கள். பணியிடம் சற்று அமைதியாக இருப்பதால், உங்களால் குடும்ப நிகழ்ச்சிகளில் சந்தோஷமாக கலந்து கொள்ள முடியும். இதன் விளைவாக மனம் சந்தோஷமாக இருக்கும். மொத்தத்தில் இந்த மாதம் பிணைப்பு மற்றும் புதிய இணைப்புகளுக்கு சிறந்த மாதமாக இருக்கும்.
பரிகாரம்: ஆகஸ்ட் மாதம் சிறந்ததாகவும், பாதுகாப்பாகவும் இருக்க செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஹனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்.
எண் 8
8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகப் போகிறது. வியாபாரிகளுக்கு சிறந்த மாதமாக இருக்கும். மேலும் புதிய தொழிலை தொடங்கவும் இம்மாதம் சிறந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். திருமணமாகாதவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
பரிகாரம்: ஆகஸ்ட் மாதம் சிறந்ததாக இருக்க செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் கணபதிக்கு இனிப்புக்களை படைத்து வழிபாடு செய்யுங்கள்.
எண் 9
9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஆற்றல் நிறைந்து இருப்பார்கள். ஒவ்வொரு வேலையையும் கவனமாக செய்வீர்கள். இதனால் வெற்றிகள் குவியும் மற்றும் பணம் அதிகம் சேரும். உறவுகளைப் பொறுத்தவரை சீராக இருக்கும் மற்றும் திருமணமாகாதவர்கள் தங்கள் தொழில் வளர்ச்சியில் கவனத்தை செலுத்த வேண்டும்.
பரிகாரம்: ஆகஸ்ட் மாதம் சிறப்பாக இருக்க முடிந்தவரை சிவலிங்கத்திற்கு சர்க்கரை கலந்த தண்ணீரை வழங்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications