Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
August 2025 Horoscope: ஆகஸ்ட் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் தேடிவரப் போகுதாம்...!
August 2025 Horoscope: ஒவ்வோர் மாதம் பிறக்கும் போதும் அது சில மாற்றங்களைகொண்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கப் போகிறது. இந்த மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக பெயர்ச்சியில் நடைபெறப் போகிறது. குறிப்பாக சுக்கிரனும், குருவும் மிதுன ராசியில் ஒன்றாக சந்திக்கப் போகிறார்கள், ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் சுக்கிரன் தனது நிலையை மாற்றிக் கொள்ளப் போகிறார், அதுவும் சந்திரன் ஆளும் கடக ராசிக்கு மாறுகிறார், மேலும் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு செல்கிறார்.
இந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில்அளவிலா செல்வத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டுவரப்போகிறது. எனவே ஆகஸ்ட் மாதம் சில ராசிக்காரர்களுக்கு அவர்களின் தலையெழுத்தை மாற்றம் மாதமாக இருக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பரம், அழகு மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போவதால், அவர்களின் நிதி நிலையில் எதிர்பாராத வளர்ச்சியை அனுபவிக்கப் போகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் கடந்த காலத்தில் கடனாக கொடுத்தப் பணம் மீண்டும் உங்களுக்குக் கிடைக்கக்கூடும், இது அவர்களின் மனதிற்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரக்கூடும். ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சந்திரனால் ஆளப்படுகிறார்கள். தற்போது புதன் கடக ராசியில் சஞ்சரிப்பதால், அவர்களின் உள்ளுணர்வுகளின் சக்தி அதிகரிக்கப் போகிறது, அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுபவர்களாக மாறுவார்கள். இந்த கிரக பெயர்ச்சி அவர்களின் வாழ்க்கையில் நிதி வளர்ச்சியையும், வெற்றியையும் தரும். இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் அவர்கள் செல்வத்தையும், பணத்தையும் ஈர்க்கலாம். இந்த காலம் வளர்ச்சிக்கு ஏற்றது என்பதால், இந்த மக்கள் தங்கள் உணர்ச்சிகளை முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் சூரியனால் ஆளப்படுகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் தனது நிலையை மாற்றி தனது சொந்த ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். செல்வத்தையும், புகழையும் பெற்று சூரியனைப் போல பிரகாசிப்பார்கள். ஆகஸ்ட் மாதத்தில் அவர்களின் ஆற்றல் மிக அதிகமாக இருக்கும், வெற்றி அவர்களை நெருங்கி வருவதால் அவர்கள் உலகின் மிகவும் மகிழ்ச்சியான மனிதராக இருப்பார்கள். இந்த மாதம் பணமும், புகழும் அவர்களைத் தேடிவரும்.
தனுசு
குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள், ஆகஸ்ட் மாதத்தில் வெற்றியும், செல்வமும் அவர்களை தேடி வருவதால் அவர்கள் அதிர்ஷ்ட ராசிகளில் ஒருவராக மாறப்போகிறார்கள். இந்த மாதத்தில் வெற்றியை அடைய அவர்கள் அதிக முயற்சிகள் செய்ய வேண்டியதில்லை, ஆனாலும் அவர்கள் பல்வேறு வழிகளில் வருமானத்தைப் பெறப்போகிறார்கள். அவர்கள் சரியான முயற்சியின் மூலம் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கான வாய்ப்பைப் பெறலாம். குருவும் சுக்கிரனும் மிதுன ராசியில் ஒன்றாக இருப்பதால் ஆகஸ்ட் மாதத்தில் பல விஷயங்களை சாதிக்கப் போகிறார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் வளர்ச்சி மற்றும் அறிவின் கிரகமான குருவால் ஆளப்படுகிறார்கள். வேலை தேடுபவர்களுக்கும், புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கும், இது சிறப்பான காலமாக இருக்கும். அவர்கள் விரும்பும் எந்த இலக்கையும் இந்த காலத்தில் அடைய முடியும். இந்த மாதத்தில் கிரகங்களும், பிரபஞ்சமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது, இதனால் அவர்களின் நீண்ட கால ஆசைகள் இந்த மாதம் நிறைவேறப்போகிறது. இந்த மாதம் அவர்களின் முயற்சிக்கும், உழைப்புக்கும் சன்மானம் காத்திருக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












