Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஆகஸ்ட் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
August 2024 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2024 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்ட் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2024 ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதத்தில் நீங்கள் போடும் திட்டங்கள் நல்ல முடிவுகளைத் தரும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும். இருப்பினும், ஆகஸ்ட் மாத இறுதியில் சூழ்நிலைகள் மேம்படும்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிக்க ஒருவரின் உதவி கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் நிதி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திடும் முன் நன்கு படித்த பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது உங்கள் பிரச்சனைகளை அதிகரித்துவிடும். ஆகஸ்ட் இறுதியில் நிலைமைகள் படிப்படியாக மேம்படும்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான வேலைகளால் வெற்றி பெறுவீர்கள். நிதி ரீதியாக சற்று மோசமாக இருக்கும். செலவுகள் கைமீறிப் போகும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் மாத இறுதியில் நிலைமை படிப்படியாக மேம்படும். வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சிரமமாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் பொறுமையுடன் எடுக்க வேண்டும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேடும். காதலில் ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தால், பேசி தீர்க்க முயற்சிப்பது நல்லது. ஆனால் மாத இறுதியில் நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க வேண்டும்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த மாதத்தில் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும். நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் ஈகோவைத் தவிர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் மாத இறுதியில் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களின் மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமானவர்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். நிதி ரீதியாக நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் மாத இறுதியில் வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திப்பீர்கள்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பரஸ்பர அன்பு அதிகரிக்கும். பணியிடத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக பயணங்களுக்காக அதிக செலவுகளை சந்திப்பீர்கள். ஆகஸ்ட் இறுதியில் நிலைமைகள் சாதமாக மாறும்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இம்மாதத்தில் உங்கள் திட்டங்கள் நல்ல வெற்றியைப் பெறும். காதல் வாழ்க்கையில் அன்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கை ஆகஸ்ட் மாதத்தில் அருமையாக இருக்கும். மறக்க முடியாத பல இனிமையான தருணங்களை சந்திப்பீர்கள். ஆனால் நிதி ரீதியாக சற்று மோசமாக இருக்கும். அதுவும் முதலீடுகளை செய்வதாக இருந்தால், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும். இல்லாவிட்டால் பணியிடத்தில் உங்கள் நிலை மோசமாகிவிடும். ஆனால் ஆகஸ்ட் இறுதியில் நிலைமை மாறி, பல நற்செய்திகளைப் பெறுவீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications