August Horoscope 2024: ஆகஸ்ட் மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயல் அடிக்கப்போகுதாம்... தப்பிச்சிகோங்க!

August 2024 Horoscope: ஆகஸ்ட் மாதம் கிட்டத்தட்ட நெருங்கி விட்டது, வரப்போகும் புதிய மாதம் தங்கள் ராசிக்கு என்னென்ன வாய்ப்புகளையும், என்னென்ன ஆபத்துகளையும் தரப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள மக்கள் பயம் கலந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆகஸ்ட் மாத ஜோதிட கணிப்புகளின் படி அனைத்து ராசிக்காரர்களும் அனுகூலமான பலன்களை பெறப்போவதில்லை. சில ராசிக்காரர்கள் எதிர்மறை விளைவுகளை சந்திக்கப் போகிறார்கள்.

August 2024 Horoscope Unlucky Zodiac Signs in August 2024

இந்த எதிர்மறை விளைவுகள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலோ, தொழில் வாழ்கக்கையிலோ அல்லது காதல் வாழ்க்கையிலோ ஏற்படலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெரும் பின்னடைவை சந்திக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 23 வரை சுக்கிரனின் சுப ஸ்தானத்தால் சில சமயங்களில் நன்மைகளைப் பெறலாம். ஆகஸ்ட் மாதத்தில் தோஷ கிரகமான கேதுவின் தாக்கத்தால் திடீர் செலவுகள் அதிகரிக்கும், இதன் காரணமாக உங்கள் வீட்டு வரவு செலவுத் திட்டம் கெட்டுப்போகலாம், உங்களின் பட்ஜெட் உங்கள் கழுத்தை நெறிக்கும்.

லக்ஷ்மிநாராயண யோகம் உருவாகி வருவதால், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆகஸ்ட் 21 வரை நிதி ஆதாயம் உண்டாகும். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில இடையூறுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

சிம்மம்

ஆகஸ்ட் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்கலாம். சனிபகவான் மற்றும் ராகு காரணமாக, உங்கள் வாழ்க்கையில் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கக்கூடிய சம்பவங்கள் ஏதாவது நடக்கலாம். ஆகஸ்ட் 25ம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்படலாம். எனவே, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தனுசு

இந்த மாதம் உங்கள் காதல் உறவுகள் சில பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கலாம். ஏழாம் வீட்டில் இருந்து பாவ தோஷங்கள் உருவாகி வருவதால், ஆகஸ்ட் 15, 2024 வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த காலகட்டத்தில் உங்கள் துணையுடன் தவறான புரிதல் ஏற்படலாம். உங்கள் நண்பர்களுடன் நன்றாக நடந்து கொள்ளுங்கள், ஏனெனில் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் நண்பர்களுடனான உறவு மோசமடைய வாய்ப்பு உள்ளது. கேதுவால் வேலை சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். எனவே, நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் கவனமாக சிந்தித்து அதன்பின் எடுங்கள்.

மகரம்

ஆகஸ்ட் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கப் போகிறது. இந்த மாதம் ராகுவிடம் கவனமாக இருக்கவும். இது உங்கள் காதல் உறவுகளை பாதிக்கலாம். உங்கள் மோசமான நடத்தையின் விளைவுகள் உங்கள் உறவுகளில் நன்றாக தெரியும், எனவே கோபப்படுவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் இழப்பு ஏற்படலாம். அதிகமாக யோசிப்பதால் சில சிக்கல்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சில எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, July 28, 2024, 10:30 [IST]
Desktop Bottom Promotion