Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
குரு சுக்கிர யோகம்: ஜூன் 05 முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Jupiter Venus Conjunction 2025 Lucky Zodiac Signs: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில சமயங்களில் கிரகங்கள் ஒன்றிணைந்து பயணித்து, அதன் தாக்கமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும், அசுரர்களின் குருவான சுக்கிரனும், ஜூன் 05 ஆம் தேதி ஒருவருக்கொருவர் 60 டிகிரியில் பயணிக்கவுள்ளனர். இதனால் இவ்விரு கிரகங்களின் நிலைகளால் லாப யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகம் அழகு, சிறப்பு, அறிவு ஆகியவற்றுடன் தொடர்புடையது மட்டுமின்றி, அன்பு மற்றும் நிதி முன்னேற்றத்தையும் தரக்கூடியது. இந்த லாப யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், 5 ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும் தரப் போகிறது.
முக்கியமாக இவ்விரு கிரங்களின் நிலைகளால் உருவாகும் யோகத்தால் இந்த ராசிக்காரர்கன் நிதி ரீதியாக வலுவடைவதோடு, சமூகத்தில் நல்ல மதிப்பு மரியாதையையும் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் கண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனின் சேர்க்கையால் தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்ட வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனின் சேர்க்கையால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கல்வி, கலை அல்லது படைப்புத் துறைகளுடன் தொடர்புடையவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். மன நிம்மதி அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், வாகனம் அல்லது வீட்டு வசதிகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கையில் பொருள் வசதிகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனின் சேர்க்கையால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் திறன் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். அழகு, வடிவமைப்பு, ஃபேஷன் அல்லது கலையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனின் சேர்க்கையால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலை முடிவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளது. உயர்கல்வி, ஆராய்ச்சி அல்லது வெளிநாடுகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். குருவின் செல்வாக்கினால் முடிவெடுக்கும் திறன் மேம்படும். தொழிலில் நீண்ட கால திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். வேலை அல்லது வணிகத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிர சேர்க்கையால் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். சிறப்பான செயல்திறன் காரணமாக அலுவலகத்தில் பாராட்டுக்கள் குவியும். ஊடகம், பொழுதுபோக்கு, கற்பித்தல் அல்லது எழுத்து போன்ற துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். புதுமண தம்பதிகள் குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications