Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
ஆடி மாதம் 2024.. 12 ராசிகளும் வழிபட வேண்டிய தெய்வங்களும்..!
ஜோதிட அடிப்படையில், மாதப் பிறப்பு என்பது சூரியன் எந்த ராசிக்குச் செல்கிறது என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று பெயர்ச்சி ஆவது சித்திரை மாதப் பிறப்பாகவும், தமிழ் வருடப்பிறப்பு என்றும் கொண்டாடப்படுகிறது.
மூன்றாவது ராசியான, மிதுன ராசியில் இருந்து நான்காவது ராசியான கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆவது ஆடி மாதப் பிறப்பை குறிக்கும். இந்த ஜூலை 17ஆம் ( 2024) தேதியான இன்று முதல், ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை, சந்திரனின் ஆட்சி வீடான கடகத்தில் இந்த மாதம் முழுவதும் சூரியன் சஞ்சரிக்கிறார்.சரி இந்த இந்த ஆடி மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை ஆடி மாதத்தில் அற்புதமான பலன்கள் நடைபெறும். வழிபட வேண்டிய தெய்வம்: செவ்வாய்கிழமையில் முருகன் வழிபாடும், வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடும் பொருளாதார உயர்வை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஆடி மாதம் பல நல்ல காரியங்களை நடத்தி வைப்பீர்... வழிபட வேண்டிய தெய்வம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி ஆலயத்திற்கு வணங்கி வெள்ளை நிற வஸ்திரம் வழங்கி மற்றும் தாமரை பூக்களால் அர்ச்சனை செய்து வருவது மேன்மையைத் தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு இந்த ஆடி மாதம் என்பது பல சவால்கள் பல வெற்றிகள் பல வாய்ப்புகளை வழங்கப்போகிறது. வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு கோவிலுக்கு சென்று விஷ்ணு பகவானை தரிசித்து துளசி மாலை சாற்றலாம்..
கடகம்
சுக்ரன் பெயர்ச்சியாகும் போது, பொருளாதாரக் குறைகள் நீங்கிவிடும். வழிபட வேண்டிய தெய்வம்: சனிபகவான், ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுவதன் மூலம் தடங்கல்கள் விலகி மேன்மை உண்டாகும்.
சிம்மம்
வீட்டிற்கு தேவையான வசதியான பல பொருள்களை வாங்கக்கூடிய ஒரு வாய்ப்பும் கிடைக்கும். வழிபட வேண்டிய தெய்வம்: வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடுங்கள். ஞாயிறன்று சூரிய பகவானை வேண்டுவது தடைகளை விலக்கும்.
கன்னி
பேச்சில் முன்கோபம் மற்றும் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். வீண் அலைச்சல் ஏற்படும் என்பதால் கவனத்துடன் இருங்கள். வழிபட வேண்டிய தெய்வம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி கோவிலில் வழிபாடு செய்வது குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
துலாம்
மாதத்தின் பிற்பகுதியில் பல அதிர்ஷ்டங்களை பெறப் போகிறீர்கள். வழிபட வேண்டிய தெய்வம்: சிவபெருமான் மற்றும் அம்பிகை வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் குடும்பம் மற்றும் தொழிலில் இருக்கும் தடைகள் நீங்கி விருத்தி அடையும்.
விருச்சிகம்:
பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றம் நிறைவு காணப்படும். வழிபட வேண்டிய தெய்வம்: முருகன் மற்றும் சனி பகவான் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்வது வாழ்வில் முன்னேற்றங்கள் அடைய உதவும்
தனுசு
இந்த மாதம் உங்களுக்கு மிக மிக ஏற்றமான மாதமாகும். வழிபட வேண்டிய தெய்வம்: குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து வரலாம்.
மகரம்
சுக்கிரன் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் வந்து அமரும் பொழுது மிகப்பெரிய நன்மைகளை வழங்குவார். வழிபட வேண்டிய தெய்வம்: சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்ளு எண்ணெய் தீபம் ஏற்றி வழபட்டு வரலாம்.
கும்பம்
வீடு வாங்கக்கூடிய யோகமோ அல்லது கட்டிய வீட்டை பழுது பார்த்து மறுபடியும் புதுமனை புகு விழா நடத்தக்கூடிய ஒரு வாய்ப்பும் கிடைக்கும். வழிபட வேண்டிய தெய்வம்: சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்ளு எண்ணெய் தீபம் ஏற்றி வழபட்டு வரலாம்.
மீனம்
பூர்வீக சொத்துக்களில் மட்டும் சற்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வழிபட வேண்டிய தெய்வம்: செவ்வாய் மற்றும் வெள்ளியன்று துர்க்கை வழிபாடும், வியாழன் அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும், இன்னல்களை தீர்க்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

