Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
2025-ல் உருவாகும் 7 ராஜயோகங்கள்: இந்த ராசிக்காரங்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
7 Rajyogas Will Form In 2025: பலவித எதிர்பார்ப்புகளுடன் 2025 ஆம் ஆண்டில் நுழைந்துவிட்டோம். இந்த 2025 ஆம் ஆண்டில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதோடு இந்த கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் கிரக சேர்க்கைகளால் ஒருசில ராஜயோகங்களும் உருவாகவுள்ளன. இந்த மங்களகரமான ராஜயோகங்களால் ஒருவர் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம், வெற்றி, நல்ல வருமானம் போன்றவற்றைப் பெறுவார்கள்.
அதுவும் இந்த ஆண்டில் 7 விதமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது 2025 ஆம் ஆண்டில் எப்போது இந்த ராஜயோகங்கள் உருவாகவுள்ளன மற்றும் அவற்றால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

கஜகேசரி ராஜயோகம்
கஜகேசரி ராஜயோகமானது சந்திரன் மற்றும் குரு ஒன்றிணைந்து பயணிக்கும் போது உருவாகும். இந்த மங்களகரமான ராஜயோகம் 2025 ஆம் ஆண்டில் மார்ச் முதல் ஜூலை வரை உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் ஒருவரது புத்திசாலித்தனம், செல்வம், மரியாதை, புகழ் போன்றவை அதிகரிக்கும். முக்கியமாக இந்த ராஜயோகத்தால் மேஷம், கடகம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப்போகிறது.
ஹன்ஸ் யோகம்
தேவர்களின் குருவான குரு பகவான் கேந்திர வீட்டில், அதாவது 1, 4, 7, 10 ஆகிய வீடுகளில் இருந்து அதன் சொந்த ராசியான தனுசு, மீனம் அல்லது உயர்ந்த ராசியான கடக ராசியில் இருந்தால், ஹன்ஸ் யோகம் உருவாகும். இப்படிப்பட்ட ஹன்ஸ் யோகம் மே 2025 முதல் அக்டோபர் 2025 வரையிலான காலகட்டத்தில் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் ஒருவர் பதவி உயர்வு, மரியாதை, செல்வம் போன்றவற்றை பெறுவார்கள். இப்படிப்பட்ட ராஜயோகத்தால் கடகம், மீனம், தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
மாளவ்ய ராஜயோகம்
ஜோதிடத்தின் படி, சுக்கிரன் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீட்டில் இருக்கும் போது மற்றும் ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளில் இருக்கும் போது அல்லது மீன ராசியில் இருக்கும் போது மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் ஏப்ரல் 2025 மற்றும் நவம்பர் 2025-ல் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் ரிஷபம், துலாம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் நன்மைகளை பெறுவார்கள். இந்த ராஜயோகத்தினால் ஒருவர் நல்ல செல்வத்தை பெறுவதோ, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
புதாதித்ய ராஜயோகம்
எப்போது ஒரு ராசியில் சூரியனும், புதனும் ஒன்றிணைந்து பயணிக்கிறதோ, அப்போது புதாதித்ய ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகமானது 2025-ல் ஜனவரி, பிப்ரவரி, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உருவாவதோடு, இந்த யோகத்தால் மிதுனம், கன்னி, சிம்ம ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த யோகத்தால் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வணிகர்கள், மாணவர்கள் மற்றும் பணிபுரிவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
சூரிய-சனி யோகம்
சூரியனும், சனியும் ஒன்றிணைந்து பயணிக்கும் போது உருவாவது தான் சூரிய-சனி யோகம். இந்த யோகத்தால் கும்பம், மகரம் ஆகிய ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த யோகமானது கடினமாக உழைப்பவர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். அதுவே சோம்பேறிகளுக்கு பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
பஞ்சமகா புருஷ யோகம்
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி அல்லது ஏதேனும் ஒரு கிரகம் கேந்திர வீட்டில் 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் அல்லது சொந்த ராசி அல்லது உச்ச ராசியில் இருந்தால், பஞ்சமகா புருஷ யோகம் உருவாகும். இதில் 2025 மே மாதத்தில் செவ்வாயால் ருச்சக் யோகமும், 2025 ஜனவரி முதல் மார்ச் வரை சனியால் சச ராஜயோகமும் உருவாகவுள்ளது. இந்த யோகங்களால் ஒருவருக்கு வலிமை, தைரியம், தன்னம்பிக்கை, செல்வம், மரியாதை ஆகியவை கிடைக்கும்.
லட்சுமி யோகம்
செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகக்கூடிய யோகம் தான் லட்சுமி யோகம். இந்த ராஜயோகத்தால் மேஷம், விருச்சிகம், கடகம் ஆகிய ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இப்படிப்பட்ட யோகம் 2025 ஜூன் மற்றும் 2025 நவம்பர் மாதத்தில் உருவாகவுள்ளன. இந்த யோகத்தால் நல்ல நிதி ஆதாயம், தொழில் வளர்ச்சி போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications