தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் இரத்த தானம் செய்யலாமா? கூடாதா?

இரத்த தானம் என்பது ஒரு மிகச்சிறந்த விஷயம்; இந்த பதிப்பில் தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் இரத்த தானம் செய்யலாமா? கூடாதா? என்று படித்து அறியலாம்.!


தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு போதுமான அளவு மற்றும் தேவைப்படும் அளவு பாலினை, சுத்தம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் பொருந்திய முறையில் அளித்து வருதல் அவசியம்! குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரை அதாவது குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் ஆறு மாத கால வயதாவது ஆகும் வரை பால் அளிக்க வேண்டும்; அதிகபட்சமாக தாய்ப்பால் சுரப்பு உள்ள வரை கட்டாயம் குழந்தைகளுக்கு பால் ஊட்ட வேண்டும்.

Advertisement

இந்த பதிப்பில் தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் இரத்த தானம் செய்யலாமா கூடாதா என்று படித்து அறியலாம்; மற்ற அன்னைகளுக்கும், தம்பதியருக்கும் விழிப்புணர்வு ஏற்பட இந்த பதிப்பினை பகிரலாம்.!

Advertisement

இரத்த தானம் செய்யலாமா? கூடாதா?

கண்டிப்பாக இரத்த தானத்தை தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் செய்யலாம்; ஆனால், அவர்கள் குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் முழுமையாக பால் கொடுத்த பின் மற்றும் அவர்களின் உடலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும்; மேலும் குழந்தையும் ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும். இந்த மாதிரியான நிலைகள் மற்றும் விஷயங்கள் மிகச்சரியான நிலையில் இருந்தால், கட்டாயம் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் இரத்த தானம் செய்யலாம்.

மருத்துவ பரிசோதனை!

ஆனால், இரத்த தானம் செய்யும் முன், மருத்துவரிடம் சென்று தனது உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவு எவ்வளவு என்று சோதித்து அறிய வேண்டும்; மேலும் இரத்த தானம் கொடுத்த பின் எவ்வளவு இருக்கும்; அது தனது உடல் நிலைக்கும் குழந்தையின் பால் சுரப்பிற்கும் ஏதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்துமா என்று கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து விஷயங்களையும் சோதித்து, மருத்துவர் இரத்த தானம் அளிக்கும் தகுதி உங்களது உடலுக்கு உள்ளது என்று கூறினால் மட்டுமே, நீங்கள் இரத்த தானம் அளிக்க வேண்டும்!

அளிக்க கூடாத நிலை!

பிரசவத்தின் பொழுது உங்களுக்கு இரத்தம் ஏற்றப்பட்டு இருந்தால், இதற்கு முன் இரத்தம் கொடுத்து மூன்று மாதம் முடியாமல் இருந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு இருந்து, அதற்கான சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் கண்டிப்பாக இரத்தத்தை தானமாக தரக்கூடாது! மேலும் பல்லில் சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்கு, ஆஸ்பிரின் மாத்திரை உட்கொண்ட பின் 72 மணி நேரத்திற்கு, உடல் பலவீனமாக இருந்தால் - இது போன்ற நிலைகளிலும் கண்டிப்பாக இரத்த தானம் செய்ய கூடாது!

நீர்ச்சத்து!

உடலின் எல்லா விஷயங்களும் சரியாக இருந்து, இரத்த தானம் தர உடல் சரியான நிலையில் இருந்தால், உடலில் நீர்ச்சத்து சரியாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இரத்த தானம் தரும் முன் இருந்து, இரத்த தானம் தந்த பின்னும் கூட உடலின் நீர்ச்சத்து மிகச்சரியான அளவில் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலின் நீர்ச்சத்து சீரான அளவில் இருப்பது இரத்தம் சுரப்பதற்கும், பால் சுரப்பதற்கும் அவசியம்.

உணவு முறை!

இரத்த தானம் கொடுக்கும் முன்னரும் பின்னரும் உடலின் இரத்த அளவை அதிகரிக்கும் வகையில், இரத்தத்தை ஊற வைக்கும் உணவுகளை தேர்ந்து எடுத்து, உண்டு வருதல் வேண்டும்; அதே போல், தாய்ப்பால் சுரப்பை தூண்டும் உணவுகளையும் உண்டு வருதல் அவசியம். ஏனெனில் இரத்தம் சுரந்தால் தான் அது தாய்ப்பாலாக முடியும். அப்படி இரத்தம் தாய்ப்பாலாக மாற, அதற்கான சத்துக்கள் உடலில் இருக்க வேண்டியது அவசியம். அது தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் உணவுகளால் மட்டுமே கிடைக்கும்.

இரும்புச்சத்து!

தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் தங்கள் உடலில் இரும்புச்சத்து சரியான அளவில் இருக்கிறதா என்று சோதித்து அறிந்த பின்னர் தான், கண்டிப்பாக இரத்த தானத்தை மேற்கொள்ள வேண்டும். உடலின் இரும்புச்சத்து அளவு சரியான அளவில் இருந்தால் தான் இரத்தம் கொடுத்த பின்னர் அடுத்து இரத்தம் சுரப்பதற்கான நிகழ்வுகள் உடலில் நடைபெறும்.

ஆகையால், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் தங்களின் உடலின் இரும்புச்சத்தை அளவில் கவனம் செலுத்தி பார்த்துக் கொண்டு, பின் முடிவு எடுக்க வேண்டும். இரும்புச்சத்து குறைவாக இருந்தால், இரத்த தானத்தை தவிர்ப்பது நல்லது!

தாய்ப்பால் குறைவாக இருந்தால்!

தாய்ப்பால் சுரப்பு பெண்களின் உடலில் குறைவாக இருந்தால், கண்டிப்பாக இரத்த தானம் தருவதை குறித்து நன்கு சிந்தித்து, அதை மேற்கொள்ளாமல் இருக்க முயல்வது மிகவும் நல்லது. ஏனெனில் இரத்தம் கொடுத்த பின், கொஞ்சம் நஞ்சம் சுரந்த தாய்ப்பாலும் வராமல் போய்விட்டால், குழந்தையின் நிலை என்ன ஆகும் என்று யோசித்து செயல்படுவது சிறந்தது!

English Summary

Is It Safe To Donate Blood While Breastfeeding?