ஆண் குழந்தைகளுக்கான சக்தி வாய்ந்த சிறந்த பெயர்கள் என்னென்ன?


குழந்தைகள் பிறந்த பின், அவர்கள் வாழ்வில் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்றும்; குழந்தைகள் அவர்களின் வாழ்வில் பலம் வாய்ந்த பதவியை அடைய வேண்டும், சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்றும்; ஊர் மெச்ச குழந்தைகள் மரியாதையுடன் வாழ்வில் வாழ்ந்து ஜெயிக்க வேண்டும் என்றும் பெற்றோர் பெரிதும் ஆசை கொள்வது உண்டு.

ஆனால், அவர்களின் ஆசையை கனவாக மட்டுமே கண்டு, நிஜத்தில் கண்டு கொள்ளாமல் விடுவது தான் பல பெற்றோர்களின் வழக்கம்.

முதல் அடி - பெற்றோருடையது!

பெற்றோர்களின் மனதில் உதித்த எண்ணங்கள் மற்றும் ஆசைகள் நிஜத்தில் நடக்க, பெற்றோர்கள் தான் குழந்தைகளின் சார்பாக முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். குழந்தைக்கு பதிலாக பெற்றோர்கள் அடி எடுத்து வைப்பது எப்படி என்று யோசிக்கிறீர்களா? ஆம் குழந்தைக்கு பெயர் வைத்து அவர்தம் வாழ்விற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது பெற்றோர்கள் தான்.

சக்தி அளிக்க வேண்டும்!

அப்படி குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள் நன்கு நேர்மறை அலைகளை எழுப்பக் கூடியதாக, சக்தி வாய்ந்ததாக, தன்னம்பிக்கையை தரக் கூடியதாக இருக்கும். ஆகையால், குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களை பார்த்து, பக்குவமாக தேர்ந்து எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நீங்கள் வைக்கும் பெயர், அவர்களுக்கு சக்தி அளிப்பதாக இருப்பதுடன், அவர்களுக்கு பிடித்ததாகவும் இருக்க வேண்டும்.

இப்பொழுது குழந்தைகளுக்கு பெயர் சூட்ட தேவைப்படும் பலம் கொண்ட, சக்தி அளிக்கும் பெயர்கள் என்னென்ன என்று படித்து பார்க்கலாம்.

அஸ்வா

அஸ்வா என்ற பெயருக்கு குதிரையை போன்ற வேகம், ஆற்றல், மகிழ்ச்சியான மனம், சக்தி போன்றவை நிறைந்தவர் என்று பொருள். குழந்தைகள் இந்த பண்புகளுடன் தங்கள் வாழ்வில் கம்பீரமாக வாழ வேண்டும் என்று விரும்பினால், இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்!

திரேன்

திரேன் என்னும் பெயருக்கு எத்தகைய துன்பங்கள் வந்தாலும், சொன்ன சொல் தவறாமல், மொழிந்த படி நின்று வாழ்வில் ஜெயிப்பவர் என்று பொருள். இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டினால், அவர்கள் வாழ்வில் எந்த ஒரு ஆபத்தான நிலையிலும் உண்மை தவறாது, நேர்மையாக நீதியின் வழி நின்று ஜெயிப்பர்.

ஹர்தீப்

இந்த பெயருக்கு கடவுளுக்கு நிகரான ஒளியை அழுத்தமாக, பலமாக பதிப்பவர்; பரப்புபவர் என்று பொருள். இந்த பெயரை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டினால், அன்பு வழியில், அறிவு ஒளியில் மனித இனத்திற்கு வழிகாட்டி செல்பவராக வாழ்வில் விளங்குவார்!

ஹிமித்

அடக்கத்தையும், ஆற்றலையும் சரி சமமாக கொண்ட வில்லாதி வில்லன், நல்லவனுக்கு நல்லவன் என்ற பொருள்களை கொண்டது இந்த பெயர். உங்கள் குழந்தைகளும் இது போன்ற குணாதியத்துடன் வளர வேண்டும், வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தால், இந்த பெயரை சூட்டவும்.

மன்வந்த்

மன்வந்த் என்ற பெயர் கொண்ட குழந்தைகள் எதற்கும் அசையாத பலமான, உறுதியான அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் என்று பொருள், குழந்தைகள் எதற்கும் கலங்காமல், பயம் கொள்ளாமல் மகிழ்ச்சியாக தைரியமாக வாழ வேண்டும் என்று நினைத்தால், இந்த பெயரை அவர்களுக்கு சூட்டுங்கள்!

மிகின்

மிகின் என்ற பெயர் வாழ்வின் பாதகங்களை வென்று சாதகமாக்கி, தங்கள் பலத்தால் நிலை நிற்பவர் என்று பொருள். உங்கள் குழந்தைகள் வாழ்க்கையின் துன்பங்களை வென்று, வாழ்வில் நிலைபெற விரும்பினால், இந்த பெயரை அவர்களுக்கு சூட்டி மகிழுங்கள்!

நிகித்

நிகித் என்ற பெயருக்கு தங்கள் பலத்தால், தங்கள் சக்தியால் உலகையே வழி நடத்துபவர் என்று பொருள். குழந்தைகள் இந்த உலகத்தையே தங்களின் தலைமை திறனால், வழி நடத்த வேண்டும் என்று விரும்பினால், இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டி மகிழலாம்.

ரினீத்

ரினீத் என்னும் பெயர் பலத்துடன் கூடிய வெற்றி சூரியனை போல், என்றும் மங்காது பிரகாசிக்கும் என்பது ஆகும். குழந்தைகள் தங்களின் வாழ்வில், பலம் கொண்டு, வெற்றியுடன் விளங்க அவர்களுக்கு இந்த பெயரை சூட்டலாம். இந்த பெயர் கொண்ட குழந்தைகள் சூரியனை போல் மங்காத ஒளி கொண்டு வாழ்வில் வாழ்வர்!

ரோனித்

ரோனித் என்ற பெயருக்கு பலம், கம்பீரம் மற்றும் சந்தோசம் போன்ற பொருள்கள் உண்டு; குழந்தைகள் வாழ்வில் சந்தோஷமான மனதுடன், நிம்மதியாக கம்பீரத்துடன் வாழ்ந்து, பலம் பொருந்தியவர்களாக விளங்க இந்த பெயரை குழந்தைக்கு கூட்டலாம்.

ஷிஜய்

ஷிஜய் என்னும் பெயருக்கு பலம் மற்றும் சக்தி என்ற அர்த்தங்கள் உண்டு; குழந்தைகள் பலம் வந்தவர்களாகவும், சக்தியின் இருப்பிடம் போன்றவர்களாகவும் வாழ்வில் வாழ்ந்து பெரும் புகழும் ஈட்டி, பெரு வாழ்வு வாழ அவர்களுக்கு இந்த பெயரை சூட்டுங்கள்!

Have a great day!
Read more...

English Summary

Strong And Powerful Names For Baby Boys