குழந்தைகளுக்கு கிச்சு கிச்சு மூட்டுவது பாதுகாப்பதானதா? இல்லையா?

கிச்சு கிச்சு காட்டுதல் என்பது விளையாட்டாக ஒருவரை பயமுறுத்த அல்லது சிரிக்க வைக்க உதவும்; குழந்தைகளுக்கு கிச்சு கிச்சு காட்டுவது பாதுகாப்பதானதா? இல்லையா? என்று இந்த பதிப்பில் படித்து அறிவோம்!


குழந்தைகள் பிறந்த பின், பல மாத கால கட்ட வளர்ச்சிக்கு பின் தான் பேச தொடங்குவார்கள்; குழந்தைகளை பேச வைக்க பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசிக் கொண்டே இருப்பது, அவர்கள் கை, கால்களை பிடித்து தொடுதலால் பேசுதல் போன்ற பல செயல்களை செய்கையில் பெற்றோர்கள் மற்றொரு விஷயத்தையும் செய்கின்றனர். அது தான் குழந்தைகளுக்கு கிச்சு கிச்சு மூட்டுதல் ஆகும்.

Advertisement

குழந்தைகளின் உடல், வயிறு மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் கிச்சு கிச்சு மூட்டுதல் காட்டி, அவர்களை சிரிக்க வைத்து மகிழ்விப்பதுடன், அவர்கள் இதன் மூலமாக பேசுவார்கள் என்று பல பெற்றோர் நம்பி வருகின்றனர்.

Advertisement

கிச்சு கிச்சு மூட்டலாமா கூடாதா?

குழந்தைகள் பிறந்த பின் அவர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டுதல் செய்யலாமா கூடாதா என்றால், அது ஒவ்வொரு குழந்தையின் தன்மையை பொறுத்தது எனலாம். ஏனெனில் சிலருக்கு உடலை தொட்டு விளையாடினால், எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது; ஆனால், இன்னும் சிலருக்கு உடலில் லேசாக விரல் பட்டு விட்டாலே போதும், குய்யோ முய்யோ என்று கத்தி கதறி விடுவார்கள்! எனவே, உங்கள் குழந்தைகளின் தன்மை எப்படிப்பட்டதோ அதற்கு ஏற்றவாறு செயல் படுதல் நல்லது.

பாதுகாப்பானது தானா?

குழந்தைகளுக்கு கிச்சு கிச்சு மூட்டுதல் என்பது பாதுகாப்பானது தானா என்று கேட்டால்,அது கிச்சு கிச்சு மூட்டும் அளவையும், குழந்தையின் தன்மையையும் பொறுத்தது. குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கிச்சு கிச்சு மூட்டுதல் வேண்டும்; ஏனெனில் அதிக நேரம் கிச்சு கிச்சு மூட்டினால், குழந்தைகளுக்கு உடலில் மற்றும் தலையில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.

குழந்தைகள் வாய் திறந்து கூட பேச முடியாத வளர்ச்சி நிலையில் இருப்பதால், அவர்களால் அவர்களின் உடலில் ஏற்படும் வலியையோ அல்லது அவர்தம் உணர்வுகளையோ வெளிப்படுத்த முடியாது.

நரம்புகளில் பிரச்சனை!

குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக கிச்சு கிச்சு மூட்டுவதால், அவர்களின் மூளையில் சென்று கொண்டிருக்கும் நரம்புகள் அதிர்ந்து, நரம்புகளால் பரிமாற்றம் செய்யப்படும் அலை வரிசையில் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளால், அவர்தம் உடலின் உள்ளே ஏற்படும் மாறுபாடுகளை உணர்வதோ, அப்படியே உணர்ந்தாலும் அதை வெளிப்படுத்துவதோ மிகவும் கடினம்.

ஆகையால், குழந்தைகளுக்கு எந்த ஒரு விளையாட்டு காட்டினாலும் 2-3 நிமிடங்கள் என்று செய்து விளையாடிவிட்டு, விட்டு விட வேண்டும்; அதிக நேரம் அவர்களை தொந்தரவு செய்ய கூடாது.

திக்கு வாய் பிரச்சனை!

குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக கிச்சு கிச்சு காட்டிக் கொண்டே இருந்தால், அவர்கள் பேசுவார்கள் என்ற நம்பிக்கை பெற்றோர்களிடத்தில் காணப்படுகிறது. இதற்கு காரணம், கிச்சு கிச்சு காட்டும் பொழுது குழந்தைகள் "ஆஆஆ உஉஉ" என்று சத்தம் இடுவதும், கெக்கள் கொட்டி சிரிப்பதும் நிகழ்வது தான்.

ஆனால், பல பெற்றோர்கள் இந்த விளையாட்டின் தீவிரத்தை உணர்வது இல்லை; குழந்தைகளுக்கு அதிகப்படியான அளவு கிச்சு கிச்சு மூட்டினால், அவர்களுக்கு மூளை அலை வரிசையில் ஏற்படும் தடுமாற்றம், திக்கு வாய் பிரச்சனையை உண்டாக்கி விடலாம்.

ஏன் காட்டுகிறோம்?

நாம் ஏன் குழந்தைகளுக்கோ அல்லது வளர்ந்த பின் மற்றவருக்கோ கிச்சு கிச்சு மூட்டுகிறோம் என்று என்றாவது நீங்கள் சிந்தித்து பார்த்தது உண்டா? பொதுவாக கிச்சு கிச்சு காட்டுவது, ஒருவரை சிரிக்க வைக்க, பயமுறுத்த, அதிர்ச்சி படுத்த, மேலும் ஆச்சரியப்படுத்த என்பது போன்ற காரணங்களுக்காக தான்.

இந்த விஷயத்தை குழந்தைகளுக்கு செய்தல், அவர்களை சிரிக்க வைக்க மட்டும் தான். சிரிக்க வைக்க இது மட்டும் தானா வழி என்று நாம் யோசித்து பார்த்து, நம் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ள முயலுதல் வேண்டும்.

மாற்று வழிகள் என்ன?

கிச்சு கிச்சு மூட்டுதல் என்பது குழந்தைகளை சிரிக்க வைக்க என்பதை தாண்டி, அவர்களுடன் தொடுதல் ரீதியாக ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் தான். குழந்தைகளை கையில் தூக்கிக் கொண்டு நடப்பது, பறவை மற்றும் வெளியில் நாய், போன்ற விலங்கினங்களை காட்டி சிரிக்க வைப்பது, இயற்கையை காட்டுவது போன்ற விஷயங்களை செய்யலாம்.

சிரிப்புடன் சந்திப்பு!

குழந்தைகளுக்கு இயற்கையான விஷயங்களை காட்டுவது அவர்களின் மூளையை வளர்ச்சி அடைய செய்து, அவர்கள் தானாகவே பல விஷயங்களை கற்றுக் கொள்ள, கவனிக்க உதவும். மேலும் குழந்தைக்கு முத்தம் கொடுப்பது, மசாஜ் செய்து விடுவது, கதைகள் கூறுவது, பாடல்கள் பாடுவது போன்ற விஷயங்கள் மூலமாக குழந்தையின் கவனத்தை ஈர்த்து அவர்களை சிரிக்க, சிந்திக்க, உங்களுடன் தொடர்பில் இருக்க செய்யலாம்; இவை ஆபத்துகள் எதுவும் இல்லாத எளிய வழி முறைகள் தான்!

English Summary

Is It Safe To Tickle Baby And Newborns?