மக்கள் தொகையிலும் சரி, பரப்பளவிலும் சரி இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாகும். இந்தியாவின் மாபெரும் பரப்பளவில் ஆயிரக்கணக்கான நகரங்கள், பேரூர்கள் மற்றும் கிராமங்களுடன் பல்வேறு நிர்வாகப் பகுதிகளும் உள்ளன. தற்போது இந்தியாவின் பரப்பளவு தோராயமாக 140 கோடிக்கும் அதிகமாகும்.

Advertisement

இவ்வளவு பெரிய மக்கள் தொகையையும், பரந்த நிலப்பரப்பையும் திறம்பட நிர்வகிப்பதற்காகவே, இந்தியா பல்வேறு மாநிலங்களாகவும் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 800-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன, சரியாக சொல்வதென்றால் 806 மாவட்டங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் மாவட்ட அளவில் ஆட்சி, நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் முக்கியப் பங்காற்றுகின்றன.

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எதுவென்றால் உத்திரப் பிரதேசம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம், ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் உள்ளது? இதற்கான பதில் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. பல அரசுத் தேர்வுகளில் கேட்கப்படும் இந்த கேள்விக்கானப் பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது?

பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் கட்ச் (Kutch) ஆகும். தரவுகளின் படி, இந்த மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 45,674 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.

Advertisement

பரப்பளவும், மக்கள் தொகையும்

45,674 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை கிட்டதட்ட 21 லட்சமாகும். இந்த மாவட்டத்தில் 10 தாலுகாக்களும், 994 கிராமங்களும் உள்ளன. இந்த மாவட்டத்தின் எழுத்தறிவு விகிதம் 70.59% ஆகும். கட்ச் மாவட்டம் வடமேற்கில் பாகிஸ்தானுடனும் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. நிலப்பரப்பின் அடிப்படையில், பல இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட இப்பகுதி கணிசமான அளவு பெரியதாகும்.

கட்ச் மாவட்டம் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்

- 'ரான் ஆஃப் கட்ச்' உலகின் மிகப்பெரிய உப்புப் பாலைவனங்களில் ஒன்றாகும். குஜராத் அரசின் இணையதளத் தகவலின்படி, இப்பகுதி சுமார் 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 'கிரேட் ரான் ஆஃப் கட்ச்' (Great Rann of Kachchh), 'லிட்டில் ரான் ஆஃப் கட்ச்' (Little Rann of Kachchh) மற்றும் 'பன்னி புல்வெளி' (Banni grassland) ஆகியவை அடங்கும்.

Advertisement

- உலக வரலாற்றின் மிகச்சிறந்த நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த 'தோலாவிரா' தொல்லியல் எச்சங்களும் இங்கு அமைந்துள்ளன.

- டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குஜராத் அரசால் நடத்தப்படும் 'ரான் உத்சவ்' எனும் மூன்று மாத காலத் திருவிழா, இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு வருவாய்க்கான ஒரு முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள கட்ச் ரான் பகுதியானது ஃபிளமிங்கோக்கள் போன்ற வளமான வனவிலங்குகளின் இருப்பிடமாகவும் உள்ளது. மேலும் இந்த மாவட்டத்தில், 'கூர்' என்றும் அழைக்கப்படும், அழிவின் விளிம்பில் உள்ள இந்தியக் காட்டுக்கழுதைக்கான சரணாலயமும் அமைந்துள்ளது.