மகாபாரதத்தை எழுத விநாயகர் விடுத்த விசித்திர நிபந்தனை என்ன தெரியுமா?


இந்தியாவின் மிகமுக்கிய இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். பல வாழ்வியல் நெறிகளை கொண்ட மகாபாரதம் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடந்த போரை பற்றியும் அதற்கு காரணமாக இருந்த பலதரப்பட்ட மக்களின் பேராசைகளையும், உலகில் தர்மத்தை நிலைநாட்ட பகவான் ஸ்ரீகிருஷ்ணர் செய்த தந்திரங்களை பற்றியும் விரிவாக கூறியது.

படிக்குபோதே நமக்கு பிரம்மிப்பையும், சிலிர்ப்பையும் ஏற்படுத்தும் மகாபாரதத்தை எழுதுவது அவ்வளவு எளிதானதாக இருக்காது அல்லவா? அதற்காகத்தான் மகாபாரதத்தை எழுதும் முக்கிய பொறுப்பை முழுமுதற் கடவுளான விநாயகரிடம் ஒப்படைத்தார் பிரம்மா. பிள்ளையார் மகாபாரதத்தை எழுதியதற்கு பின் பெரிய கதையே உள்ளது. அந்த கதை என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.

பிரம்மாவின் ஆசை

மகாபாரத போர் முடிந்து பாண்டவர்களும், கௌரவர்களும் இறந்த பிறகு பூமியில் அமைதியும், தர்மமும் நிலவியது. இதற்கு காரணமாக இருந்த மகாபாரத போரை பற்றிய கதையை புத்தகமாக எழுத விரும்பினார் பிரம்மா. ஏனெனில் வருங்கால மக்கள் அதனை படித்து தர்மத்தின் படி வாழ வேண்டுமென விரும்பினார் பிரம்மா. எனவே அதனை எழுத தகுதியான ஆள் யாரென யோசித்த போது அவர் நினைவில் முதலில் உதித்தது வேதவியாசர்தான்.

வேதவியாசர்

பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் பாட்டனார்தான் இந்த வேதவியாசர். இவரின் மூலம் பிறந்தவர்கள்தான் பாண்டு, திருதராஷ்டிரன் மற்றும் விதுரன் ஆவர். யோகவலிமை பொருந்திய இவரே மகாபாரதத்தை எழுத வேண்டுமென முடிவெடுத்த பிரம்மா வியாசர் முன் தோன்றி அவருடைய விருப்பத்தை கூறினார்.

வியாசரின் தயக்கம்

பிரம்மாவின் விருப்பத்தை கேட்டு சிறிது கலக்கமடைந்தார் வியாசர். ஏனெனில் மகாபாரதம் என்பது பல ஆயிர நபர்கள் சேர்ந்து முன்னெடுத்த மாபெரும் காவியமாகும். அதனை ஒற்றை ஆளாக எழுதுவது என்பது இயலாத காரியம் என்று பிரம்மாவிடம் கூறினார். மேலும் தனக்கு உதவி புரிய ஒருவர் உடனிருந்தால் எழுதுவது எளிதாக இருக்கும் என்று கூறினார். வியாசர் சொல்வதும் சரிதான் என்று நினைத்த பிரம்மா அவர் கேட்ட உதவியை வழங்க எண்ணினார்.

பிரம்மாவின் உதவி

வியாசருக்கு உதவி செய்ய முடிவெடுத்த பிரம்மா முழுமுதற் கடவுளான விநாயகரிடம் வியாசருக்கு உதவி செய்யும்படி வேண்டினார். பிள்ளையாரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் பிள்ளையார்தான் குறும்புக்கார கடவுளாயிற்றே. எனவே அவர் ஒப்புக்கொள்ளும்போதே மனதிற்குள் ஒரு திட்டம் போட்டார்.

விநாயகரின் நிபந்தனை

வியாசரால் மகாபாரதத்தை வேகமாக கூற இயலும் என்பதை விநாயகர் நன்கு அறிவார். இருப்பினும், அவரை சோதிக்க எண்ணிய விநாயகர் வினோதமான ஒரு நிபந்தனையை விதித்தார். அதன்படி வியாசர் மகாபாரதத்தை கூற தொடங்கியவுடன் நிறுத்தாமல் கூற வேண்டும். ஒருவேளை இடையில் நிறுத்தினால் அப்பொழுதே தான் எழுதுவதை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவேன் என்று கூறினார்.

வியாசரின் திகைப்பு

விநாயகரின் வேகம் மற்றும் திறமை பற்றி வியாசர் நன்கு அறிவார். தன்னாலும் வேகமாக கதையை கூற இயலும், ஆனால் விநாயகரின் வேகத்திற்கு தன்னால் ஈடுகொடுக்க இயலுமா என்பதை எண்ணி அச்சமுற்றார் வியாசர். அப்பொழுதுதான் அவருக்கு ஒரு யோசனை வந்தது.

வியாசரின் சாதுர்யம்

வியாசர் பிள்ளையாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி தான் இடைவெளி இல்லாமல் கதையை கூறுவதாகவும், ஆனால் அதன் புரியாமல் பிள்ளையார் எதனையும் எழுதக்கூடாது என்று கூறினார். பிள்ளையாரும் சிரித்துக்கொண்டே அதற்கு சம்மதம் தெரிவித்தார்.பின்னர் வியாசர் கூற விநாயகர் வேகமாக எழுத தொடங்கினார்.

வியாசர் ஓய்வு

எப்பொழுதெல்லாம் ஓய்வு தேவை என்று வியாசர் நினைத்தாரோ புரிந்துகொள்ள மிகவும் கடினமான ஒரு வாக்கியத்தை கூறுவார். கணேசர் அதனை புரிந்துகொள்ள முயற்சிக்கும் நேரத்தில் தனக்கு தேவையான ஓய்வை எடுத்துக்கொண்டார். மேலும் அந்த நேரத்தில் கடினமான வாக்கியங்களை உருவாக்கினார்.

மற்றொரு பிரச்சினை

இருவரும் வேகமாக கதை எழுத தொடங்கியவுடன் மற்றோரு பிரச்சினை எழுந்தது. அதுதான் எழுதுகோல் பிரச்சினை. அவர்கள் உபயோகப்படுத்திய எந்த எழுதுகோலும் அவர்கள் இருவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலவில்லை. எனவே உடைந்து கொண்டே இருந்தது. எழுதுவதை நிறுத்த வேண்டாமென நினைத்த விநாயகர் தன் தந்தங்களில் ஒன்றை உடைத்து எழுதுவதை தொடர்ந்தார். நீங்கள் பார்க்கும் பெரும்பாலான புகைப்படங்களில் விநாயகர் உடைந்த தந்தத்துடன் இருக்க காரணம் இதுதான்.

Have a great day!
Read more...

English Summary

The epic Mahabharata was written by Lord Ganesha and Veda Vyasa duo. There is an interesting story behind this. Lord Ganesha imposed a novel condition to write the Mahabharata.