அந்தரங்க ரீதியாக பெண் உடல் குறித்து ஆண்கள் அறியாத விசித்திரமான உண்மைகள்!


உடல் என்பதை மனிதர்கள் மட்டுமே கவர்ச்சி பொருளாக காண்கிறார்கள். வேறு எந்த ஒரு உயிரினமும் தன் எதிர்பாலினத்தின் மீது உடல் சார்ந்த கவர்ச்சி காண்பதில்லை. தனக்கு வேண்டும் போது கலவுதலில் ஈடுபடுவது இயல்பாக காணப்பட்டாலும்.. உடல் வளைவு, நெளிவுகளுடன் இருக்க வேண்டும், இந்த அளவில் இருந்தால் தான் அழகு என்ற அளவுகோல்கள் மனிதரிடம் மட்டுமே காணப்படுகிறது.

பொதுவாக, மனிதர்கள் தங்கள் எதிர்பாலினத்தின் உடல் குறித்த முழுமையான விஷயங்கள் அறிந்திருப்பதில்லை. ஒருசில அடிப்படை விஷயங்கள் பாடப்புத்தகத்தில் இருந்தாலும் சில ஆசிரியர்கள் கற்பிக்க முயல்வதில்லை. இதர விஷயங்களை யாருமே சொல்லித் தருவதில்லை.

இங்கே, பெண்களின் உடலில் அந்தரங்க ரீதியாக ஆண்கள் அறியாத சில விசித்திரமான உண்மைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

#1

பெண்களுக்கு உடலில் ஒரு மார்பகத்தை விட மற்றொரு மார்பகம் பெரியதாக / சிறியதாக இருக்கும். இரண்டும் ஒரே அளவில் இருக்காது.

#2

சில பெண்களுக்கு கலவியில் ஈடுபடும் போது என்று மட்டுமின்றி, தங்களுக்கு பிடித்தமான உணவு குறித்து நினைத்துப் பார்க்கும் போதிலும் கூட உச்சக்கட்ட இன்ப நிலை அடைவார்களாம்.

#3

ஒரே முறையில் பெண்களால் மல்டிப்பில் ஆர்கஸம் (உச்சக்கட்ட நிலை இன்பம்) அடைய வாய்ப்பு இருக்கிறது.

#4

சில பெண்களுக்கு இரண்டு பெண் உறுப்புகள் / கருப்பை இருக்கலாம். சில பெண்கள் பெண்ணுறுப்பு, கருப்பை இல்லாமலும் பிறந்திருக்கிறார்கள்.

#5

ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் மூளையில் நினைவு கொள்ளும் திறன் அதிகமாக இருக்கிறதாம்.

#6

நல்ல நறுமணம் உடைய ஆண்களிடம் பெண்கள் கொஞ்சம் கொடுத்தலாக அட்ராக்ட் ஆகிறார்கள்.

#7

பத்து நொடிகளுக்கும் மேலாக கட்டியணைத்து / கட்டிப்பிடிக்கும் பட்சத்தில், அவர்கள் மீது எளிதாக பெண்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். (குறிப்பு: அவர்கள் ஒப்புதலுடன், உரிமை அளிக்கும் பட்சத்தில்)

#8

நாற்பது வயதுக்கு குறைந்த பெண்களோடு ஒப்பிடுகையில், நாற்பது வயதுக்கு அதிகமான பெண்கள் எளிதாக ஆர்கஸம் பெறுகிறார்களாம்.

#9

பெண்ணுறுப்பு ஊடுருவல் முறியோடு ஒப்பிடுகையில், கிளிட்டோரிஸ் வகை தீண்டுதலில் தான் 75% பெண்கள் உச்சக்கட்ட இன்ப நிலை அடைகிறார்களாம்.

#10

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், பெண்ணுறுப்பின் கிளிட்டோரிஸ் பகுதியானது, பெண்களுக்கு இன்பமளிக்க மட்டுமே பயனளிக்கிறது. மேலும், கிளிட்டோரிஸ் என்பது பெண் உடலில் வளர்ந்துக் கொண்டே இருக்கும் பகுதி என்றும் கருதப்படுகிறது.

#11

பெண் உடலுக்குள் 48 மணி நேரம் அல்லது அதற்கும் கூடுதலாக விந்தணு உயிருடன் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது.

#12

Precum மூலமாக கூட பெண்கள் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டாம். Precum (pre-ejaculate fluid) என்பது, முறையான / முழுமையான கலவியில் ஈடுபடாமல் செக்ஸுவல் ரீதியாலான தீண்டுதலின் போது ஆணுறுப்பில் இருந்து வெளிப்படுவதாகும்.

#13

பெண்களின் கன்னித்திரைக்கும், அவர்களது கற்பு நிலைக்கும் சம்மந்தமே இல்லை. சிலர் கன்னித்திரை கிழிசல் ஏற்பட்டிருந்தால், அந்த பெண் ஏற்கனவே கலவி உறவில் ஈடுபட்டிருப்பார் / கற்பிழந்தவள் என்று கருதுகிறார்கள்.

பொதுவாக தடகள விளையாட்டுகள், சைக்கிள் ஓட்டுதல், ஜிம்னாஸ்டிக், நடனம் போன்றவற்றில் ஈடுபடுவதன் காரணத்தால் கூட கன்னித்திரை கிழிசல் உண்டாக வாய்ப்புகள் உண்டு.

#14

சிலர், ஆர்கஸம் மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது என்று நம்புகிறார்கள்.

#15

பெண்ணுறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதனால், பால்வினை நோய் தொற்று வேகமாக பரவ வாய்ப்புகள் இருப்பதாகவும் அறியப்படுகிறது.

Read More About: facts women body pulse

Have a great day!
Read more...

English Summary

Strange Facts Men Do Not Know About Women Body!