சனீஸ்வரனால் தான் விநாயகருக்கு யானை தலை வந்ததா? அப்போ முதலில் எப்படி இருந்தார்?


விநாயகர் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று பார்வதி தேவி ஆசைப்பட்டு, வரம் கேட்டு தன்னுடைய பிள்ளையாகப் பெற்றார் என்பது நமக்குத் தெரியும்.

அதற்கான காரணம் என்ன, முதன் முதலில் பிள்ளையார் எப்படி வந்தார்? என்ன செய்ததால் பிள்ளையார் மீது பார்வதிக்கு விருப்பம் அதிகமானது. வரம் கேட்டு தன் பிள்ளையாகப் பெற்றார் என்ற வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போமா?

மஞ்சள் பிள்ளையார்

ஒருமுறை பார்வதி தேவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குளிக்கச் சென்றாள். அப்போது, காவலுக்கு யாருமில்லை என்பதால், என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே, தன்னுடைய கையில் இருந்த மஞ்சளை உருட்டி உருட்டி கூம்பு வடிவில் ஒரு உருவத்தைச் செய்துவிட்டார். அதை ஒரு சிறுவனைப் போல், உயிருள்ளது போல் பாவித்தாள். அதை வாசலில் நிறுத்தியாள். நீ இங்கேயே இரு. நான் குளிக்கப் போகிறேன். யாராவது வீட்டுக்குள் வந்தால் உள்ளே விடாது என்று சொல்லிச் சென்றார்

சிவன் வருகை

பார்வதி குளிக்கச் சென்ற கொஞ்ச நேரத்திலேயே சிவபெருமான் வீட்டுக்கு வந்தார். ஆனால் மஞ்சளால் வடிக்கப்பட்ட அந்த சிறுவன் ிவனை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினான்.

சிவனின் கோபம்

என்னுடைய வீட்டுக்குள் என்னையே போக விடாமல் ஒரு பொடிப்பையன் தடுப்பதா என்று கடும் கோபமுற்ற சிவன், அந்த சிறுவனின் தலையை அப்படியே கிள்ளி எறிந்து விட்டார். குளித்துவிட்டு திரும்பி வந்த பார்வதி, தான் காவலுக்கு வைத்த சிறுவன் தலை கொய்யப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து கண்ணீர் விட்டார்.

யானை வடிவ தலை

பார்வதியின் கண்ணீரைத் தாங்கிக் கொள்ள முடியாத சிவன் தன்னுடைய வேலையாட்களுக்கு ஒரு ஆணையை வெளியிட்டார். அது என்னவென்றால், வடக்கு திசை பார்த்து படுத்திருக்கும் மிருகத்தின் தலையை கொய்து வாருங்கள் என்று கூறினார்.

வேலையாட்களும் காடுகளில் போய் அலைந்து திரிந்தனர். அப்போது, யானை மட்டுமே வடக்கு திசை பார்த்து படுத்திருந்தது. உடனே யானையின் தலையை வெட்டி எடுத்து வைத்துவிட்டு வந்தனர். அதைக்கொண்டு வந்து, கொடுத்ததும், சிவன் வெட்டுப்பட்டு கிடக்கும் சிறுவனாகிய பிள்ளையாரின் உடலோடு யானையின் தலையை ஒட்டி உயிர் கொடுத்து விட்டார்.

தலை பற்றிய இன்னொரு கதை

பார்வதி தேவிக்கு விநாயகர் பிறந்ததும், தன்னுடைய குழந்தையை வந்து ஆசிர்வதித்து விட்டுச் செல்லும்படி, தேவலோகத்தில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்தாராம். மற்ற தேவர்கள் அனைவரும் வந்து ஆசிர்வதித்தார்களாம். ஆனால் அந்த நிகழ்வுக்கு சனீஸ்வரன் மட்டும் வரவில்லையாம்.

சனீஸ்வரனின் சாபம்

உடனே பார்வதி தேவி சனீஸ்வரனை அழைத்து, என்னுடைய குழந்தையை நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு சனீஸ்வரனோ நான் யாரைப் பார்த்தாலும், யாருடைய தலையைத் தொட்டாலும், அவருடைய தலை வெடித்து விடும் என்னும் சாபம் எனக்கு இருக்கிறது. அதனால் என்னால் அந்த ஆசிர்வாதத்தை என்னால் கொடுக்க முடியாது என்று சொன்னாலும் அதை பார்வதி ஏற்கவில்லை. நீங்கள் கட்டாயம் ஆசிர்வதிக்கத் தான் வேண்டும் என்று சொன்னார். அவரும் வேறு வழியின்றி பிள்ளையாரை ஆசிர்வதித்தார். உடனே பிள்ளையாரின் தலை வெடித்து சுக்கு நூறாக்கியது. அதனால், பிள்ளையாருக்கு யானையின் தலை பொருத்தப்பட்வே பார்வதி தேவி ஆறுதல் அடைந்தார்.

விநாயகர் பூஜை

ஆவணி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்து வந்த சதுர்த்தியில் இந்த விநாயகர் பூஜை ஆரம்பிக்கும். பெணர்மிக்கு அடுத்து சதுர்த்தி வரையிலும் தினமும் பூஜை செய்தாள். அதன்பிறகு மண பிள்ளையாரை மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நதியிலேயே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம ஆகம மரபுகள் மீறாமல் இருப்பது தான் விரதத்தின் பலனாக இருக்கும். இப்படித்தான் ஆரம்பித்தது அவருடைய வரலாறு.

Have a great day!
Read more...

English Summary

here we are discussing about the history of lord ganesha's elephant head.