உங்க ராசி இதுவா?... அப்போ உங்களுக்கு இன்னைக்கு தெய்வம் கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்கும்...


நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம்

நண்பர்கள் மூலமாக நல்ல செய்தி உங்கள் காதுகளுக்கு வந்து சேரும். பணியில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே போகும். நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக வெற்றியில் முடியும். இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய எண்ணாக 1 ம் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் திசையாக மேற்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய நிறமாக சிவப்பு நிறமும் உங்களுக்கு சாதகமாக அமையும்.

ரிஷபம்

பெற்றோர்களின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பயணங்களின் மூலம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். பரம்பரை சொத்துக்களினால் நன்மை உண்டாகும். செய்யும் தொழிலில் பல புதிய புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபங்களை சம்பாதிப்பீர்கள். இன்று உங்களுக்கு வெற்றியைத் தருகின்ற அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெரும் புகழ் பெறுவீர்கள். உங்களுக்கு உங்கள் மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பும் இருக்கும்.

கடகம்

மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகமாகும். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

சிம்மம்

பிள்ளைகளால் சுப விரயம் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் லாபம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பூாவீக சொத்து சம்பந்தமான சுப விரயங்கள் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி

உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்

உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்களால் தனலாபம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்கவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்குள் புகழப்படுவார்கள். சுயதொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு லாபம் அடைவார்கள். இளைய சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு

செய்யும் தொழிலில் உங்களின் மதிப்பு கூடும். ஆராய்ச்சிப் பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இளைய உடன் பிறப்புகளால் சாதகமான பலன் கிடைக்கும். ஆகாய மார்க்க தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய லாபம் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்

வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம்கிடைக்க வாய்ப்புண்டு. செய்யும் தொழிலில் அந்த துறை சார்நு்தவர்களிடம் உங்களுடைய செல்வாக்கு உயரத் தொடங்கும். அரசு சார்பான பணிகளில் இதுவரை இருந்துவந்த தாமதங்கள் விலகும். தாய்வழி உறவினர்களா்ல சுப செய்திகள் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். எண்ணிய லாபம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

கும்பம்

வாகனங்களால் லாபம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் கையாளும் புதுவிதமான யுக்திகளால் தொழிலில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம் சாம்பல் நிறமும் இருக்கும்.

மீனம்

எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனதில் தேவையற்ற கவலைகள் உண்டாகும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வாகனப் பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர்மஞ்சள் நிறமும் இருக்கும்.

Have a great day!
Read more...

English Summary

There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people. By analyzing the projection of the position of planets, and the Sun and the Moon on the Ecliptic at the moment of birth. Astrology can give us a glimpse of a person's basic characteristics, preferences, flaws and fears.