2017 வித்தியாசமான விநாயகர் சதுர்த்தி சிலைகள்!


வருடா வருடம் விநாயகர் சதுர்த்தியின் போது, அந்த வருடத்தின் பெரும் தாக்கம் விநாயகர் சிலை உருவாக்குதலில் பார்க்க முடியும்.

அந்த வகையில் லிங்கத்தை தூக்கி கொண்டு நடக்கும் வகையிலான பாகுபலி விநாயகர் சிலைகள் சென்ற வருடம் பெரும் ஈர்ப்பை மக்களிடம் பெற்றது.

இது மட்டுமின்றி, லாப்டாப் விநாயகர், விண்வெளி விநாயகர் ராக்ஸ்டார் விநாயகர் என விநாயகர் கதைகளில் இருக்கும் அவதாரங்களை விட அதிக அவதாரங்கள் எடுத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்திக்கு வெளிவந்திருக்கும் சில வித்தியாசமான விநாயகர் சிலைகள்!!!

சென்ற வருடம் போலவே, இந்த வருடமும் ஒருசில வித்தியாசமான விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒரு சில விநாயகர்கள்...

கடந்த ஒரு வருடமாக மாறி, மாறி சமூக தளங்களில் வைரளாகி கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். விநாயகர். எலிக்கும் கூட டவுசர் போட்டுவிட்டது இந்த சிலையை உருவாக்கிய நபர் தீவிர ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்பதை விளக்குகிறது.

இதை கண்டால் விநாயகருக்கு கோபம் வருகிறதோ இல்லையோ, அவரது வாகனமாக மூஞ்சூறுக்கு கோபம் வரும். ஏனெனில், இங்கே விநாயகருக்கு வாகனமாக இருப்பது சூப்பர் பைக். பைக் ஓட்டும் போதும் கூட விநாயகர் சூப்பராக தான் இருக்கிறார்.

மோடியுடன் விநாயகர், இவர்கள் இருவரும் உலகை சுற்றி வருவதன் மூலம் பிரபலமானவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். தனது வாகன படையுடன் இந்திய பிரதமர் மோடியுடன் கூட்டு வைத்து தோற்றமளிக்கும் மோடி கூட்டணி விநாயகர்.

Have a great day!
Read more...

English Summary

Different Vinayagar Chathurthi Ganesh Statues - 2017!