பெரிய இடத்து சமாச்சாரம்! இந்தியாவில் ஜரூராக நடக்கும் ஆண் விபச்சாரம், யார் இந்த #Gigolo க்கள்?


மிஸ்டர் ஜி, ஒரு பிரஃபஷ்னல் #Gigolo. இவரை கண்டுபிடிப்பது கடினமான செயலா என்று கருதினால்., அதுதான் தவறு. இவரை லிங்கிடு-இன் தளத்தில் மசாஜ் தெரப்பிஸ்ட், இண்டிபெண்டன்ட் ஜிக்லோ. மேல் எஸ்கார்ட் என்ற விளம்பரத்தில் இருந்து கண்டிப்பிடிக்க முடிந்தது.

மிஸ்டர் ஜியை பொறுத்தவரை, இது ஒரு திருப்திப்படுத்தும் சேவை., மன அழுத்தம் குறைத்து ரிலாக்ஸாக உணர, தனது வாடிக்கையாளர்களை கேளிக்கைப்படுத்தி மகிழ்வித்து வருகிறார். அதுவும் மிகவும் பாதுகாப்பாக, யாருடைய தகவலும் வெளிவராதபடி.

சவால்!

என் சேவையை ஒருமுறை எடுத்துக் கொள்ளுங்கள், நான் நிச்சயமாக கூறுகிறேன், நீங்கள் மீண்டும், மீண்டும் என் சேவையை அணுகுவீர்கள் என்று துணிச்சலாக சவால்விடுகிறார் மிஸ்டர் ஜி.

குறிப்பு: தங்கள் சேவை திருப்திப்படுத்தவில்லை என்றால், இவர் சர்வேஸ் சார்ஜ் எதுவும் வாங்குவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ அது மட்டும் தான் இந்த ஜிக்லோ செய்கிறார்கள்.

இந்தியாவில்?

இந்தியாவில் இப்படி ஒரு சர்வீசா? எப்படி? எங்கிருந்து இயங்குகிறார்கள் இவர்கள்..? என பல கேள்விகள் எழுகிறதா? சும்மா லிங்கிடு-இன் சர்ச் பாரில் சென்று 'gigolos in India' என்று சொடுக்கிவிடுங்கள்... ஒரு பெரும் பட்டியலே வந்து குவிகிறது.

நூற்றுக்கணக்கில்!

நூற்றுக்கும் மேற்பட்ட முகவரிகள் ஜிக்லோ தேடுதலில் வந்து குவிகிறது. ஒவ்வொரு முகவரிகளிலும் அவர்களுக்கான தனிப்பட்ட டிஸ்க்ரிப்ஷன் மற்றும் எதற்காக இதனுள் வந்துள்ளோம் என்ற விளக்கமும் அளித்துள்ளனர். இதன் மூலம் மட்டுமே அவர்களால் தங்களுக்கான வாடிக்கையாளர்களை பிடிக்க முடியும் என்று மிஸ்டர் ஜி கூறுகிறார்.

கருப்பு பக்கங்கள்!

மிஸ்டர் ஜி முதலில் ஒரு வாடிக்கையாளரிடம் பேசுவதாக நம்பி தான் பேச துவங்கினார். ஆனால், இந்த ஜிக்லோ குறித்த உண்மைகள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்திய பிறகு, அவர் இந்த ஆண் பாலியல் சந்தை குறித்த பல கருப்பு பக்கங்களை குறித்து வாய் திறந்தால்... அவர் புரட்டிய பக்கங்கள், உங்களை நிச்சயம் புரட்டிப்போடும்.

யார் இந்த ஜிக்லோ?

யார் இந்த ஜிக்லோ வேலையை பார்க்கிறார்கள். பெரும்பாலான ஜிக்லோக்கள் ஐ.டி. மற்றும் எம்.பி.எ படித்த, வேலை பார்க்கும் பட்டதாரிகள். ஜிக்லோவாக வேலை செய்தவன் மூலமாக மாதம் இரண்டில் இருந்து மூன்று இலட்சம் வரை இவர்கள் சம்பாதிக்கிறார்கள்.

ஒரு சாட் ரூம்...

ஒருமுறை சாட்டிங் செயலி ஒன்றில் சாட் செய்துக் கொண்டிருந்த போது, ஒருவரிடம் இருந்து சாட் வந்துள்ளது. அதில் வந்த விளம்பரங்கள், ஜிக்லோவாக வேலை செய்ய தயாரா? பெண்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்று விளம்பரம் வந்திருக்கிறது. அந்த விளம்பரத்தை க்ளிக் செய்து அதனுள் சென்ற ஐந்தாவது நிமிடத்தில் கூர்கானில் இருந்து ஒரு பெண் மெசேஜ் செய்திருக்கிறார். விருப்பம் இருந்தால், ஐந்தாயிரம் ரூபாய் தருவதாக ஆபர் அளித்துள்ளார்.

இரண்டும் உண்டு...

இந்த மிஸ்டர் ஜி, நான்கு வருடங்களுக்கும் மேலாக ஜிக்லோவாக பணியாற்றி வருகிறார். இவர் இதுவரை 35 வயதுக்குட்பட்ட பெண்களிடம் மட்டும் தான் வேலை செய்திருக்கிறார். இவர், செக்ஸுவல் ரீதியான மற்றும் காமம் அற்ற வெறுமென மசாஜ் மற்றும் ரிலாக்ஸ் முறைகளிலான ஜிக்லோ சர்வீஸும் செய்திருப்பதாக கூறி இருக்கிறார்.

உன்னிப்பாக!

ஜிக்லோவாக பணியாற்றும் போது உன்னிப்பாக இருக்க வேண்டும். லிங்கிடு-இன் தளத்தில் அடிக்கடி அப்டேட் செய்துக் கொண்டே இருக்க வேண்டும். பலருக்கு இப்படியான சேவை இருப்பதை மெசேஜ் மூலமாக அனுப்ப வேண்டும். அப்போது தான் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்று கூறுகிறார் மிஸ்டர் ஜி.

இவரது ஒரே பாலிஸி, வாடிக்கையாளரின் திருப்தி தான். அவர்கள் என்ன வேண்டுகிறார்களோ அதை மட்டும், ரீசனபில் ப்ரைஸில் செய்துத்தர வேண்டும்.

ஒருவர் அல்ல..

இங்கே மிஸ்டர் ஜி என்பவர் ஒருநபர் அல்ல, லிங்கிடு-இன் தளத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ஜிக்லோக்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களை மிஸ்டர் ஜி என்றெல்லாம் குறிப்பிட்டுக் கொள்வதில்லை. தங்களை ஹாஸ்பிட்டாலிட்டி நபர்கள் என்று வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். உடல் மற்றும் மன ரீதியான ரிலாக்ஸ்சேஷன் அளிப்பவர்கள் என்றும், அதற்கான குறிப்பிட்ட தொகையையும் குறிப்பிடுகிறார்கள்.

இணையத்தளம்!

இந்தியாவில் இயங்கும் ஜிக்லோ ஆண்களுக்கு என தனி இணையத்தளம் திறக்கப்படவுள்ளதாகவும் அறியப்படுகிறது. இங்கே இணைய வேண்டும் என்றால், அந்த நபரின் தனிப்பட்ட ஈமெயில் மற்றும், முகவரி குறிப்புகள், அவரது ஐந்து புகைப்படங்கள் தேவை. ஃபேஸ்புக், ட்விட்டர் போல பர்சனல் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த இணையத்தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்றால்...

மூன்று மாதத்திற்கு - ரூ. 10, 000/-

ஆறு மாதங்களுக்கு - ரூ. 18, 000/-

ஒரு வருடத்திற்கு - ரூ. 30, 000/-

இங்கே ரெஜிஸ்டர் செய்துக் கொண்டால், மாதத்திற்கு குறைந்தது பத்து வாடிக்கையாளர்களை வழங்குவோம் என்று குறிப்பிடுகிறார்கள்.

போலியானவை!

ஜிக்லோவிற்கான இணையத்தளங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. இவற்றில் 90% போலியானவை. வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய பிறகு, இவர்கள் அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். இதனால், இந்த ஜிக்லோ தொழிலில் நம்பிக்கை மிகவும் அவசியம் என்கிறார் மிஸ்டர் ஜி.

கடினம்!

இங்கே புதியதாக ஒரு வாடிக்கையாளரை பிடிப்பதை காட்டிலும், ஏற்கனவே கிடைத்த வாடிக்கையாளரை தக்கவைத்துக் கொள்வது தான் மிகவும் கடினம். பெரும்பாலான இளம் ஆண்கள் இதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வருகிறார்கள். இங்கே இணையும் இளம் ஆண்கள், இதுகுறித்து வெளியே செய்தி / தகவல் கசிந்தால் தங்களுக்கு அவமானம் என்பதால் எங்கேயும் புகார் அளிப்பது இல்லை.

திடுக்கிடும் நிகழ்வுகள்!

இங்கே சிலர் பிம்ப்களும் உள்ளே நுழைகிறார்கள். இவர்கள், ஜிக்லோவாக பணியாற்ற வரும் ஆண்களை இடையே பிடித்து, அவர்களை ஆண்களுடனும் இணைய செய்து, அதை படம்பிடித்து, அவர்களை பிளேக்மெயில் செய்து பணம் பிடுங்கி, அச்சுறுத்துவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.

கோட்-வேர்ட்கள்!

ஜிக்லோகளுக்கு என தனி கோர்ட்-வேர்டுகள் எல்லாம் இருக்கிறதாம். இங்கே ஒரு வாடிக்கையாளருக்கு ஜிக்லோ ஒருவரை பிடித்துவிட்டால், அவர்தான் தொடர்ந்து பயணிப்பாளர்கள் என்றும் கூறுகிறார்கள். பலரும் வெவ்வேறு ஜிக்லோக்களுடன் இணைய முயற்சிப்பது இல்லையாம்.

எந்தவொரு ஜிக்லோவும் தனது இன்பத்தை கட்டிலும், வாடிக்கையாளர் பெண்மணியின் இன்பத்தை தான் கருத்தில் கொள்கிறார்கள். ஒருமுறை ஜிக்லோ சரியாக நடந்துக் கொண்டால், அவர்களை விட்டு அந்த வாடிக்கையாளர்கள் பிரிவதில்லை என்றும் மிஸ்டர் ஜி கூறுகிறார்.

பணம்!

இங்கே புதியதாக வரும் ஜிக்லோக்களுக்கு ஆயிரம் ரூபாய் தான் அளிக்கப்படுகிறது. அவர், ரெகுலராக வேண்டும் நபராக மாறும் பொழுது தான் அவரது ரெட் அதிகரிக்கிறது. ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரம், பத்தாயிரம், இருபது ஆயிரம் என பலமடங்கு சில ஜிக்லோக்கள் சம்பாதிக்கிறார்கள் என்று மிஸ்டர் ஜி கூறுகிறார்.

பெரும்பாலும் பணக்கார பெண்கள் தான் இந்த ஜிக்லோக்களை நாடுகிறார்கள். சில பகுதிகளில் ஜிக்லோக்களுக்கு என சில பார்ட்டிகள் நடக்கின்றன என்றுசில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் இந்த ஜிக்லோ கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகிறது.

டெல்லி ஜிக்லோ!

டெல்லியை சேர்ந்த ஒரு ஜிக்லோ கூறும் பொழுது, ஒரு பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்றால், நான் முப்பதில் இருந்து நாற்பது ஆயிரம் வரை சார்ஜ் செய்கிறேன். ஒரு மாதத்தில் நான்கில் இருந்து ஐந்து பார்ட்டிகள் அட்டன்ட் செய்கிறேன் என்று கூறுகிறார்.

வாட்ஸ்-அப் மற்றும் லிங்கிடு-இன் தளங்கள் மூலமாக தான் எங்கே வர வேண்டும் என்ற தகவல் பரிமாற்றம் நடக்கின்றன.

சிவப்பு நிற கர்ச்சீப் என்பது ஒரு கோட்-வேர்டாக அறியப்பட்டாலும்.. இது எந்தளவிற்கு உண்மை என்பது புலப்படவில்லை. சில ஜிக்லோக்கள் அப்படி எந்த கோட்-வேர்டும் இல்லி என்றும் கூறுகிறார்கள்.

Read More About: men life india insync

Have a great day!
Read more...

English Summary

Have You Ever Heard About Gigolo? Very Few Know About It. Gigolo is nothing else, Just Male Prostitution. In Worldwide Male Escort Services are Spreading like a Fire. It Reached India Also, Lets Know About What is Gigolo, and How it works.