விறைப்பு தன்மையை குணப்படுத்தி விந்தணுவை அதிகரிக்கும் முன்னோர்களின் முறைகள்...!


பல வகையான மருத்துவ முறைகள் இன்று பின்பற்றப்பட்டு வந்தாலும், இவை அனைத்திற்கும் நம் முன்னோர்களின் வழி முறையே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் செய்யும் ஒவ்வொரு முறைகளுக்கும் பின்னும் ஒரு சில அறிவியல் பூர்வமான காரணம் இருந்து வருகிறது. இன்று மக்கள் அவை எல்லாவற்றையும் மறந்து, பயனில்லா பல வகையான செயல்களை செய்கின்றனர்.

Advertisement

பெரும்பாலான ஆண்கள் இன்று அவதிப்படும் பிரச்சினை விறைப்பு தன்மை, விந்தணு குறைபாடு, மலட்டு தன்மை போன்றவையே. ஆண்களின் இந்த பிரச்சினையை சரி செய்ய நம் முன்னோர்கள் பல்வேறு வழி முறைகளை கடைபிடித்துள்ளனர். அவை என்னென்ன என்பதை பற்றி முழுமையாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

Advertisement

ஆண்களின் வேதனைகள்..!

இன்றைய உலக வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை பெரிதும் தாக்க கூடியதாக இருக்கிறது. உண்ணும் உணவு முதல் உறங்கும் முறை வரை எல்லாமே நம்மை பாதிக்க கூடும். ஆண்களின் அன்றாட செயல்கள், தேவைகள், பழக்க வழக்கங்கள் போன்ற பல்வேறு காரணிகளால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆண்களுக்கு குழந்தை பாக்கியத்தை இவை அனைத்தும் சரிவர ஏற்படுத்தி தர மறுகின்றன.

பிரச்சினைகளும் ஆசனமும்..!

முன்னோர்கள் மிகவும் பலமாக இருந்ததற்கு எண்ணற்ற காரணிகள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. உணவு பழக்கம் முதல் அவர்களின் இல்லற வாழ்வு வரை எல்லாவற்றிலும் ஒரு ஆரோக்கிய முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. விறைப்பு தன்மை, விந்தணு குறைபாடு, மலட்டு தன்மையை எளிதாக குறிப்பிட்ட ஆசன முறைகளை வைத்து சரி செய்து விடலாமாம்.

அர்த மத்ஸ்யேந்திர ஆசனம்

பண்டைய கால ஆசன முறைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று இந்த அர்த மத்ஸ்யேந்திர ஆசனம். இது உடலில் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி ஆண்களுக்கான பிரச்சினைகளை குணப்படுத்துமாம். மேலும், கணையம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின் செயல்பாட்டை சீராக வைக்குமாம்.

பயிற்சி முறை...

இந்த ஆசனத்தை செய்ய முதலில் இரண்டு கால்களையும் நீட்டி கொண்டு, பின் வலது காலை இடது காலின் மேல் போட்டு விட்டு, இடது காலை வலது காலிற்கு அடியில் வைத்து கொள்ளவும். அடுத்து, இடது கையை வலது காலின் கட்டை விரலை பிடிக்கும்படி செய்யுங்கள். அத்துடன் வலது கையை முதுகுக்கு பின்புறம் வைத்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், விறைப்பு தன்னை எளிதில் குணமாகுமாம்.

பஷிமோட்டன ஆசனம்

விறைப்பு தன்மை கோளாறுகளை குணப்படுத்தும் எளிமையான வழி முறை இந்த பஷிமோட்டன ஆசனம். இது பிறப்புறுப்பில் அதிக வலிமையை ஏற்படுத்தி, விறைப்பு தன்மையை குறைக்கும். மேலும், விந்தணுக்கள் ஓரகசம் அடைவதற்கு முன்பே, வெளியேறுவதையும் தடுத்துவிடும். தினமும் காலையில் இந்த ஆசனத்தை செய்து வாருங்கள் நண்பர்களே.

பயிற்சி முறை...

முதலில் இரண்டு கால்களையும் நீட்டி கொண்டு, அடுத்து 2 கைகளையும் மேல் தூக்கி, நீட்டிய கால்களை தொடுமாறு செய்ய வேண்டும். அதாவது பாதி உடலை படுத்து கொண்டு தொடுமாறு செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் 5 முதல் 10 முறை செய்து வந்தால் ஆண்மை குறைவு பிரச்சினை நீங்கி விடும்.

உட்தன்பதாசனம்

ஆசனங்களில் முதன்மையான ஒன்றாக கருதப்படுவது இந்த உட்தனபாதாசனம். இது உடல் தசைகளை வலிமை பெற செய்து இல்லற வாழ்வில் இனிமையை ஏற்படுத்தும். அத்துடன் தசைகளுக்கு அதிக பயிற்சியை தந்து, ரத்த ஓட்டத்தை செம்மையாக வைத்து கொள்ளும். மேலும் இது விறைப்பு தன்மைக்கு முற்றிப்புள்ளி வைக்கும்.

பயிற்சி முறை...

இந்த உட்தன்பதாசனாவை செய்து பார்க்க, முதலில் சமமான தரையில் மேல் நோக்கி படுத்து கொள்ளவும். அடுத்து, இரண்டு கால்களையும் மேலே தூக்கி 90 டிகிரி கோணத்தில் வைத்து கொள்ளவும். வேண்டுமானால், கைகளை தொடைகளில் வைத்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது நிதானமாக மூச்சை இழுத்து வெளியே விடவும். இதனை காலை அல்லது மாலை வேளையில் செய்து வந்தால் விறைப்பு தன்மை குணமாகும்.

கருடாசனம்

கிட்டத்தட்ட கருட பறவையை போல் செய்யும் முறைதான் இந்த கருடாசனம். இதனை செய்வது சற்றே எளிதுதான். என்றாலும் ஆரம்ப நிலையில் சிறிது கடினமாக இருக்கும். ஆண்கள் இந்த பயிற்சியை தொடந்து செய்து வந்தால் விரைவில் நலம் பெறலாம். இந்த ஆசனம் இல்லற வாழ்வில் அதிக நேரம் நீடித்து இருக்க உதவுகிறது.

பயிற்சி முறை...

முதலில் எழுந்து நின்று கொண்டு, வலது கால்களை இடது காலின் மேல் பின்னி கொள்ளுமாறு செய்யவும். அத்துடன் இடது கையை மெல் தூக்கி கொண்டு, வலது கையின் மேல் பின்னி கொள்ளுமாறு செய்யவும். இவ்வாறு ஒவ்வொரு கைகளையும் கால்களையும் மாறி மாறி செய்யும்போது மூச்சை நன்கு இழுத்து விடவும். இது ரத்த ஓட்டத்தை சீராக்கி விந்தணுவின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

சித்தாசனம்

சித்தர்களின் பெருமையை உரக்க சொல்வதே இந்த சித்தாசனம். சித்தர்கள் பெரும்பாலும் இந்த நிலையில் இருப்பதால் இந்த பெருமைமிக்க பெயரை பெற்றது. இந்த ஆசன முறையை செய்து வந்தால் மூட்டு வலி, இல்லற வாழ்வில் திருப்தி இன்மை, விந்தணுவின் இயக்க குறைபாடு போன்றவை சரியாகும்.

பயிற்சி முறை...

அற்புத சித்தாசனத்தை செய்ய, முதலில் இரண்டு கால்களையும் நீட்டி கொண்டு, இடது காலை ஆசனவாய் பகுதிக்கு நேராக வைத்து கொள்ளவும். அதே போன்று வலது காலையும் வைத்து கொள்ளவும். கிட்டத்தட்ட ஆழ்ந்த தியானம் செய்யும் போது சித்தர்கள் உட்கார்ந்து இருக்கும் சம்மண நிலையில் இருக்க வேண்டும்.

தனுராசனம்

தனு என்பதற்கு "வில்" என்ற அர்த்தம் உண்டு. இந்த ஆசனம் செய்ய, வில்லை வளைப்பது போன்று நம் உடலையும் வளைக்க வேண்டும். இவை விறைப்பு தன்மை, ஆண்மை குறைபாடு, விந்தணு உற்பத்தி குறைபாடு போன்றவற்றை குணமாக்கும். இந்த ஆசனத்தை மெல்லமாக செய்யவும்.

பயிற்சி முறை...

இந்த ஆசனத்தை செய்ய முதலில் குப்பற படுக்க வேண்டும். அடுத்து இரண்டு கணுக்காலை கைகளால் பிடித்து கொண்டு, நெஞ்சை மேல் நோக்கி தூக்குமாறு செய்ய வேண்டும். இந்த நிலையில் மூச்சை இழுத்து வெளியில் விடவும். இவ்வாறு, வில்லை போன்று உங்கள் உடலை வளைத்து செய்து வந்தால் பல்வேறு நலன்கள் கிடைக்கும்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

English Summary

Yoga can help you to cure erectile dysfunction. There are several types of yoga techniques that men. Yoga can enhance the blood flow to the pelvic region, which beats erectile dysfunction.