எத்தனை வயது வரை ஆணுறுப்பு வளர்ச்சி அடையும் தெரியுமா?


தாம்பத்யம் என்று வரும்போது ஆண்களுக்கு ஏற்படும் முதல் கவலை தங்களின் ஆண்குறியின் அளவை பற்றியதுதான். எவ்வளவுதான் ஆரோக்கியமான ஆணாக இருந்தாலும் அவர்களுடைய ஆணுறுப்பின் நீளம் பற்றி கவலையடையாமல் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு தாம்பத்யம் பற்றி இந்த சமூகம் கட்டமைத்திருக்கும் மாய தோற்றம் அப்படி.

ஆணுறுப்பின் அளவிற்கும், மகிழ்ச்சியான தாம்பத்யத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லையென்று பலமுறை கூறிவிட்டாலும் ஆணுறுப்பின் நீளம் குறித்த ஆண்களின் கவலை ஒருபோதும் நிற்கப்போவதில்லை. இந்த பதிவில் ஆணுறுப்பின் நீளம் குறித்து உங்களுக்கு இருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதிலை பார்க்கலாம்.

ஆணுறுப்பின் நீளம்

முன்னரே கூறியது போல ஆணுறுப்பின் நீளத்திற்கும், மகிழ்ச்சியான உடலுறவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்கள் இருவருக்குமிடையே இருக்கும் நெருக்கம் மற்றும் காதலே உங்கள் உறவை மகிழ்ச்சியானதாக மாற்றுமே தவிர மற்ற காரணிகள் அல்ல. மருத்துவர்களின் ஆய்வுபடி உலக அளவில் 17 சதவீத ஆண்களுக்கே சராசரியான நீளத்தை விட அதிக நீளமுடைய ஆணுறுப்பு உள்ளது. மீதமுள்ள 83 சதவீதத்தினருக்கு சராசரியான நீளமுடைய ஆணுறுப்பே உள்ளது.

சராசரி நீளம்

ஒரு ஆணுடைய சராசரி ஆணுறுப்பின் நீளம் என்பது 12.9 செமீ அல்லது 5.1 இன்ச் ஆகும். இது விறைப்புதன்மையில் இருக்கும்போதுதான் சாதாரண நிலையில் இருக்கும்போது ஆணுறுப்பின் நீளம் ஒவ்வொரு ஆணுக்கும் வேறுபடும்.

குறைவான நீளம்

பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் ஆணுறுப்பு சிறியதாக இருப்பதாகவே ஒரு எண்ணம் இருக்கிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். குறைவான நீளம் என்பது மேற்கூறிய சராசரி நீளத்தை விட குறைவாக இருப்பதாகும். சிறிய ஆண்குறியின் நீளம் என்பது விறைப்பு நிலையில் இருக்கும்போது 3.5 இன்ச் அல்லது அதற்கு குறைவாக இருப்பதாகும்.

ஆணுறுப்பின் நீளத்தை அதிகரிக்க இயலுமா?

ஆணுறுப்பின் நீளத்தை அதிகரிக்கும் மருந்துகள் என்று பல விளம்பரங்கள் இப்பொழுது வருகிறது. இது இப்பொழுது மிகப்பெரிய வியாபாரமாக மாறி வருகிறது. ஆனால் உண்மையில் அது இயலாத ஒன்று. உடற்பயிற்சி, உணவுமுறை என எதுவும் உங்கள் ஆணுறுப்பின் நீளத்தை மாற்ற இயலாது.

எப்போது ஆணுறுப்பின் வளர்ச்சி தடைபடும்?

ஆண்கள் பருவமடைந்தவுடன் அவர்களின் ஆணுறுப்பின் வளர்ச்சி நின்றுவிடும். இது ஒவ்வொரு ஆணுக்கும் மாறுபடும். ஏனெனில் அனைத்து ஆண்களும் வெவ்வேறு வயதில் பருமடைகிறார்கள். இருப்பினும் 16 வயதில் உங்கள் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் முழுவளர்ச்சியை எட்டிவிடும். அதற்கு மேல் உங்கள் ஆணுறுப்பும் வளராது.

உயரம் பொறுத்து மாறுபடுமா?

ஆண்களிடையே நிலவும் மற்றொரு மூடநம்பிக்கை ஆண்கள் உயரமாக இருந்தால் அவர்களுக்கு ஆணுறுப்பு நீளமாக இருக்கும் என்பது. இது முழுக்க முழுக்க தவறான ஒன்று. ஏனெனில் ஆணின் உயரத்திற்கும் ஆணுறுப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உயரம் மட்டுமல்ல ஆணின் எடை, பிஎம்ஐ என எதுவுமே ஆணுறுப்பின் நீளத்தை நினர்ணயிக்க இயலாது.

காலை நேர விறைப்பு

அனைத்து ஆண்களுக்கும் காலை நேரத்தில் ஆணுறுப்பு விறைப்புடன் இருப்பது என்பது சாதாரணமான ஒன்றுதான். இதற்கு டெஸ்டிஸ்ட்ரோன் ஹார்மோனின் சுரப்பு, ஆணுறுப்பு உராய்வு என பல காரணங்கள் உள்ளது. இதை நினைத்து ஆண்கள் பயம் கொள்ள தேவையில்லை. காலை நேர விறைப்பு இல்லையென்றால்தான் நீங்கள் அச்சப்படவேண்டும். ஏனெனில் அது ஆண்மைகுறைவின் அடையாளமாக இருக்கலாம்.

எந்த வயதில் ஆண்மைக்குறைவு ஏற்படும்?

ஆண்மைக்குறைவு ஏற்படுவதற்கு வயது ஒரு காரணமே தவிர அது எந்த வயதில் ஏற்படும் ன்று கூற இயலாது. பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்க்ளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த பிரச்சினை என்பது ஆண்களுக்கு 17 வயதிலிருந்தே தொடங்கிவிடும். எனவே சீரான உணவுப்பழக்கம் மற்றும் தேவையற்ற போதை பழக்கங்களை தவிர்த்து உங்கள் ஆண்மையை பாதுகாத்து கொள்ளுங்கள்.

சுயஇன்பம் செய்தால் ஆணுறுப்பின் நீளம் அதிகரிக்குமா?

இது மற்றொரு மூடநம்பிக்கையாகும். சுயஇன்பம் கண்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பது எப்படி முட்டாள்தனமான நம்பிக்கையோ அதேபோலத்தான் சுயஇன்பம் கண்டால் ஆணுறுப்பின் நீளம் அதிகரிக்கும் என்பதும். ஆராச்சியாளர்கள் சுயஇன்பத்திற்கும் ஆணுறுப்பின் நீளத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்று கூறியுள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

Men may not want to talk about it in public. But a lot of guys have questions about their penis. Here are answers to some of the most common questions guys have.