ஆண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு, கடைபிடிக்க வேண்டிய முக்கிய செயல்கள்..!


பூமியில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் தங்களின் செயல்களை செய்வார்கள். நாம் செய்யும் செயல்கள் மற்றவரை எந்த விதத்திலும் நோகடிக்காமல் இருக்க வேண்டும். ஆரோக்கியமான நலம் தரும் செயல்கள் எப்போதும் இன்பத்தையே தரும். அந்த வகையில் தாம்பத்திய வாழ்வில் நாம் சில தவறுகளையும் செய்து வருகின்றோம்.

அவை உங்கள் இருவருக்கும் இடையில் உறவு விரிசலை ஏற்படுத்த கூடும். குறிப்பாக நாம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு முடித்தவுடன் முதன்மையான சில தவறுகளை செய்து வருகின்றோம். இத்தகைய தவறுகள் பல்வேறு வகையில் மன கசப்பை தரும். இந்த பதிவில், ஆண்கள் தாம்பத்திய உறவு கொண்டபின் செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத செயல்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

இன்பமான தாம்பத்திய உறவு..!

மனிதனாக பிறந்த பிறகு இந்த பிறப்பின் முழு பலனையும் அடைய வழி செய்வது இந்த இல்லற வாழ்வுதான். இரு உயிர்களும் சேர்ந்து ஒரு அற்புத உயிரை உயிர்ப்பிக்கும் போது கிடைக்கும் நிலைதான், உன்னதமான ஒன்றாகும். பெண் என்றாலும் சரி, ஆண் என்றாலும் சரி, இருவரும் ஒரு உயிரை இந்த பூமியில் உயிர்ப்பிக்க வழி செய்வதன் மூலம் மகத்துவமானவர்களாக கருதப்படுகிறார்கள்.

செய்ய கூடாதவை #1

தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு பல இணைகள் செய்கின்ற முதன்மையான தவறு இதுதான். தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு தூங்கி விடுவதே. இது பெரும்பாலும் ஆண்களே செய்வதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. எனேவ, தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு உறங்குவதை தவிர்த்து விடுங்கள்.

செய்ய கூடாதவை #2

பொதுவாக ஆண்கள் செய்யும் இந்த தவறு அவர்களின் இணையின் விருப்பத்தை நிராசையாக மாற்றி விடுகிறது. தங்களின் தேவை பூர்த்தி ஆனவுடன் அவர்களை விட்டு தனியே விலகுவது சலிப்பை ஏற்படுத்தும். எனவே, உங்களின் இணையின் விருப்பம் நிறைவேறியதா என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

செய்ய கூடாதவை #3

இல்லற வாழ்வில் ஈடுபட்ட பிறகு ஆண்கள் தொலைக்காட்சி அல்லது ஸ்மார்ட் போனில் கவனம் செலுத்துவார்க்ள. இது அந்த பெண்ணிற்கு ஒரு வித சங்கடத்தை தருமாம். ஏனெனில், ஏதோ ஒரு வேலை முடித்து விட்டு, அடுத்த வேலையை பார்ப்போம் என்பன போல தோன்ற வைக்கும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செய்ய கூடாதவை #4

பெரும்பாலான ஆண்கள் இறுக்கமான உடைகளை பயன்படுத்துவது வழக்கம். தாம்பத்தியத்தில் ஈடுபடும் நேரத்தில் இறுக்கமான உடைகளை தவிர்த்து விடவும். மேலும், இல்லற வாழ்வு முடிந்த உடனேயே இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செய்ய கூடாதவை #5

பலர் இந்த தவறை செய்வது வழக்கமான ஒன்றாகும். இணையுடன் இணைந்த பிறகு உடனேயே குளித்து விடுவர். இது சற்றே தவறான செயலாக கருதப்படுகிறது. தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு ஒரு சில மணி நேரம் கழித்து வேண்டுமானால் குளித்து கொள்ளலாம்.

செய்ய கூடியவை #1

தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உடலுக்கு நலனை தரும். சில ஆண்களுக்கு இது போன்ற நேரங்களில் உடலில் நீர்சத்து குறைந்து இருக்கும். எனவே தண்ணீர் பருகினால் ஆண்களின் இல்லற வாழ்வு நலம் பெறுவதோடு ஆரோக்கியமான உடல் நலத்தையும் பெறலாம்.

செய்ய கூடியவை #2

கட்டாயம் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு தங்கள் கைகளை கழுவ வேண்டும். சிலர் அவர்களது இணையின் பிறப்புறுப்பை தொட்டிருப்பார்கள். எனவே, இவை நோய் கிருமிகளை உங்கள் உடலிலும் ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, நன்கு சோப்பு போட்டு கைகளை அலசுங்கள்.

செய்ய கூடியவை #3

பெரும்பாலான ஆண்கள் இந்த தவறை வழக்கமாக செய்து வருகின்றனர். தாம்பத்தியத்தில் உறவு முடிந்தவுடன் அவர்களின் இணையுடன் பேசாமல் தூங்க சென்று விடுவர். இது ஆரோக்கியமான உறவை ஏற்படுத்தாது. மாறாக அவர்களிடம் மிகவும் நேசமுடன் காதல் ததும்ப பேசினால், இருவரின் காதல் உறவும் இல்லற வாழ்வும் இனிதே நலம் பெறும்.

செய்ய கூடியவை #4

உங்கள் இணை தாம்பத்தியத்தில் திருப்தி அடைந்தாரா என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ளல் வேண்டும். உங்கள் இணை இன்னும் திருப்தி அடைய வில்லையென்றால் அவரின் விருப்பம் பூர்த்தி ஆகும் வரை உறவில் நீடிக்க செய்வது, நல்ல சூழலை ஏற்படுத்தும்.

செய்ய கூடியவை #5

தாம்பத்தியத்தில் ஈடுபட்ட சிறிது நேரம் கழித்து, உங்கள் இணையுடன் குளிப்பது ஆரோக்கியமான உறவை மேம்படுத்தும். மேலும் இது இருவரின் நெருக்கத்தையும் அதிகரிக்க செய்யும். ஆண்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்களில் இதுவும் ஒன்றே.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

Read More About: health sperm habits men

Have a great day!
Read more...

English Summary

No matter how long you have been having sex, there are certain mistakes you might be making. People do focus on the dos and don'ts of sex