விநாயகருக்கு ஏன் கொழுக்கட்டை பிடிக்கும்...? இதிலுள்ள ஆரோக்கிய ரகசியம் என்ன..?


விழாக்கள் என்றாலே நம் எல்லோருக்கும் சற்றே இன்பமாக இருக்கும். விழா நாளில் புது புது ஆடைகளை போட்டு கொண்டு நண்பர்களுடன் புகைப்படம் எடுப்பது அதிக ஆனந்தத்தை தர கூடிய ஒன்றாகும். பல விதமான விழாக்களை நம் இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பல தரப்பினருக்கும் பிடித்தமான "விநாயகர் சதுர்த்தியை" கொண்டாடுவதில் நிச்சயமாக மகிழ்ச்சி இருக்கும். விநாயகர் சதுர்த்தி அன்று, மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பல வித படையல்களை அவருக்கு படைப்பார்கள்.

எவ்வளவோ உணவுகள் இருந்தாலும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான படையல் "கொழுக்கட்டை" தான். இந்த கொழுக்கட்டையில் மறைந்துள்ள ஆரோக்கிய ரகசியத்தை பற்றியும், ஏன் விநாயகருக்கு கொழுக்கட்டை பிடிக்கிறது என்பதை பற்றியும் முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

முதல் தெய்வம்..!

நம் மக்கள் எந்த ஒரு செயல் செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்வது, ஒரு நம்பிக்கையின் அடிப்படையாக பின்பற்ற படுகிறது. பல வகையான தெய்வங்கள் இருந்தாலும், வெற்றி தரும் தெய்வமாக விநாயகரை பெரும்பாலான மக்கள் வழிபடுகின்றனர். இத்தகைய பெருமைமிக்க புராண பின்னணி கொண்ட இவருக்கு கொழுக்கட்டை மிகவும் பிடித்தமான உணவாக கருதப்படுகிறது.

ஏன் கொழுக்கட்டை..?

பொதுவாகவே கொழுக்கட்டையை பற்றிய புராணங்கள் பல உள்ளன. வட இந்தியாவில் ஒரு வகையான புராணம் இருக்கிறது. அதே போன்று தென்னிந்தியாவிலும் ஒரு வித புராணம் சொல்லப்படுகிறது. விநாயகரின் வாகனமான எலி, செய்யும் ஒவ்வொரு செயலையும் பாராட்டும் விதத்தில் இந்த கொழுக்கட்டையை விநாயகர் பரிசாக தருவாராம். இதனாலயே கொழுக்கட்டையை இவருக்கு படையலாக தருவதாக ஒரு புராணம் சொல்கிறது.

21 கொழுக்கட்டைகள் ஏன்...?

வட இந்தியர்கள் பெரும்பாலும் 21 கொழுக்கட்டைகளை விநாயகருக்கு வைத்து படைப்பார்கள். இதற்கும் ஒரு கதை சொல்லபடுகிறது. அதாவது, சிவனும் பார்வதியும் விநாயகரின் முதல் மனைவியை(வேறு புராண கதை) பார்க்க செல்லும்போது பசியாக இருந்தார்களாம். அப்போது முதல் மனைவியான அனுசுயா,சரியான நேரத்தில் அவரின் பசியை தனிக்காமல் விநாயகரின் பசியை ஆற்றி கொண்டிருந்தாராம்.

சிவனின் கோபமே கொழுக்கட்டையானது..!

அவரின் அலட்சிய போக்கு சிவனுக்கு கோபத்தை ஏற்படுத்தி, விநாயகரின் பசியை அதிகமாக்க செய்ததாம். பிறகு அவர் மனைவி கொழுக்கட்டை என்ற இனிப்பை தந்து அவரின் பசியை ஆற்ற முயன்றார். பசி அடங்காத காரணத்தால் அதிகம் சாப்பிட்டு விட்டாராம். இவ்வளவு சாப்பிட்ட பிறகு 21 முறை ஏப்பம் விட்டதால், 21 கொழுக்கட்டைகள் படையலாக போடப்படுகிறது.

கொழுக்கட்டையின் ஆரோக்கிய ரகசியம்..!

பாரம்பரிய உணவுகளில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் மறைந்துள்ளன. நாளைக்கு நம் வீடுகளில் நிரம்பி இருக்கும் ஒரு இனிப்பு பண்டம் கொழுக்கட்டைதான். இது பசியை நன்கு தூண்டி ஆரோக்கியமான உடல் நலத்தை தருகிறதாம். புரதசத்து, கால்சியம், நார்சத்து, கார்ப்ஸ் போன்றவை இதில் நிறைந்துள்ளது.

சேர்க்கப்படும் பொருட்கள்...

கொழுக்கட்டை பல்வேறு விதத்தில் செய்யப்படும். நம் பதிவில் பிள்ளையாருக்கு பிடித்த "பிடிகொழுக்கட்டை" பற்றிய ஆரோக்கிய தன்மையை பார்ப்போம். இவற்றில் சேர்க்கப்படும் முக்கிய பொருட்கள்...

அரிசி மாவு

வெல்லம்

எள்ளு

தேங்காய்

ஏலக்காய்

நெய்

உப்பு

நீர்

இதய ஆரோக்கியத்திற்கு...

கொழுக்கட்டையில் சேர்க்கப்படும் எள்ளு, அதிக நலன்களை தர கூடியது. இது ரத்த அழுத்தத்தை சீராக்கி உடலின் செயல்பாட்டை செம்மைப்படுத்துகிறது. மேலும், ஹீமோகுளோபின் பிரச்சினை உள்ளவர்களுக்கு கொழுக்கட்டை சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் இதில் உள்ள காப்பர் மூட்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு தீர்வை தரும்.

எதிர்ப்பு சக்தியை கூட்டும்...

எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் கொழுக்கட்டையை சாப்பிட்டால் விரைவில் குணம் பெறலாம். இதில் பெரும்பாலும் சேர்க்கப்படும் வெல்லத்தில் செலினியம், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், தாதுக்கள் அதிகம் உள்ளது. எனவே இந்த இனிப்பு பண்டம் உங்களை வலிமையுடன் வைக்க உதவும். அத்துடன் உடலில் உள்ள அழுக்குகளையும் இது சுத்தம் செய்யுமாம்.

பொலிவை தரும் கொழுக்கட்டை..!

கொழுக்கட்டையில் சேர்க்கப்படும் தேங்காயில் பல வித நன்மைகள் உள்ளது. இவை கரைய கூடிய கொழுப்புக்களை கொண்டுள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காது. மேலும், சரும பாதுகாப்பை தந்து முடியின் வளர்ச்சிக்கும் உதவும். அத்துடன் கொலஸ்ட்ரோலின் அளவு இதில் குறைவாக உள்ளதால் இதய நோய்களில் இருந்து காக்கும்.

எலும்புகளுக்கு வலுதரும் கொழுக்கட்டை..!

விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை சாப்பிடுபவர்களுக்கு கூடுதலாக ஒரு நன்மையையும் கிடைக்கும். நல்ல பலமுள்ள எலும்புகளையும் இந்த கொழுக்கட்டைகள் தருகிறது. அதாவது, எள்ளு மற்றும் வெல்லத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறதாம். மேலும், பற்களுக்கும் அதிக பாதுகாப்பை தருகிறது.

பசியின்மையை போக்கும்...

கொழுக்கட்டை ஒரு சிறந்த உணவாக பெரும்பாலான மக்களால் கருதப்படுகிறது. ஆரோக்கிய இனிப்பு பொருட்களில் இந்த கொழுக்கட்டையும் இடம் பெறும். இவை பசியின்மையால் அவதிப்படுவோருக்கு சிறந்த ஸ்னாக்காக பயன்படும். மாலை வேளையில் குழந்தைகளுக்கு கொழுக்கட்டை செய்து தந்தால் ஆரோக்கிய உணவாக இருக்கும்.

கொழுக்கட்டை சாப்பிடுங்கள் நண்பர்களே..!

நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் பல வித ஏற்பாடுகள் உங்கள் வீட்டில் நடந்து கொண்டிருக்கும். வேலை பளுவில் இந்த இனிப்பை சாப்பிட மறவாமல், இவற்றை தயார் செய்து நன்கு உண்டு மகிழுங்கள். அத்துடன் உங்கள் நண்பர்கள், ஏழை மக்கள், ஆதரவற்றோர் போன்றோர்களுக்கு கொழுக்கட்டைகளை பரிமாறி இன்பமான வாழ்வை வாழுங்கள் நண்பர்களே.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

Read More About: health wellness food recipe

Have a great day!
Read more...

English Summary

Kozhukattai is a favorite sweet for ganesh. It has protein, fiber, calcium, carbohydrate and other nutrients and best of all it is steamed snack.