சாப்பிடக்கூடாத பழங்கள் மற்றும் காய்கறிகள் என்னென்ன தெரியுமா?

உண்மைதான் சில காய்கறிகளும், பழங்களும் ஆரோக்கியமானவையாக இருந்தாலும் அவற்றில் உள்ள குறிப்பிட்ட சில சத்துகள் நமக்கு ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும். இதுபோன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை குறைந்த அளவில் சாப


இயற்கை சார்ந்து வாழும்போது நமது வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை உணவுகள் ஆடம்பர பொருளாகி விட்ட இந்த காலத்தில் ஆரோக்கியமான உணவு என்பதே அரிதான ஒன்றாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் நாம் சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகளே நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

Advertisement

உண்மைதான் சில காய்கறிகளும், பழங்களும் ஆரோக்கியமானவையாக இருந்தாலும் அவற்றில் உள்ள குறிப்பிட்ட சில சத்துகள் நமக்கு ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும். இதுபோன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது. இந்த பதிவில் அப்படிப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Advertisement

உருளைக்கிழங்கு

இது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஏனெனில் உருளைக்கிழங்கு என்பது பலருக்கும் பிடித்த ஒரு காயாகும். மேலும் இதில் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற பல சத்துக்களும் நிறைந்துள்ளது. பெரும்பாலும் இதிலுள்ள நார்சத்துக்களை தோலை சுத்தம்செய்வதன் மூலம் நாம் இழந்துவிடுகிறோம். மேலும் இதனை வேகவைத்தோ, வறுத்தோ சாப்பிடும்போது இதில் உள்ள சத்துக்கள் மறைந்து கொழுப்பு போன்ற தீமைகள் மட்டுமே கிடைக்கிறது.

ஆரஞ்சு ஜூஸ்

சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. ஆனால் இதெல்லாம் பழமாக சாப்பிடும்போது மட்டும்தான். ஏனெனில் அவரை பழச்சாறாக மாறும்போது அதில் உள்ள சக்கரை மற்றும் கலோரிகளின் அளவு அதிகரிக்கிறது. அவை நிச்சயமாக நம் ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல.

மாம்பழம்

மாம்பழம் அனைவரும் விரும்பும் ஒரு பழமாகும். சுவையான இந்த பழம் பல அத்தியாவசியமான சத்துக்களையும் கொண்டுள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நீர்சத்துக்கள் உங்களுக்கு உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஆனால் இதில் 31கி சர்க்கரை உள்ளது. எனவே குறைந்த கார்போஹைட்ரேட் உணவுமுறையை பின்பற்றுவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

பட்டாணி

" அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு " என்ற பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த பச்சை நிற பட்டணிதான். நார்ச்சத்துகள் நிறைந்துள்ள இந்த பட்டாணியில் அதிகளவு கலோரிகள் மற்றும் கார்போஹட்ரேட்டுகள் உள்ளதால் இது எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கிறது.

திராட்சை

அடைக்கப்பட்ட உணவுகளை விட பழங்கள் சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியமான ஒன்று என்ற எண்ணம் நம்மிடம் உள்ளது. இது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும் முழுவதும் உண்மையல்ல. ஏனெனில் ஒரு கொத்து திராட்சையில் கிட்டத்தட்ட 39கி சர்க்கரை உள்ளது. எனவே இதனை குறைவாக சாப்பிடுவது நல்லது.

கத்திரிக்காய்

சுவையான அதேசமயம் ஆரோக்கியமான ஒரு காயாக கருதப்படுவது கத்திரிக்காய். இது பலவிதமான வலிகளை குணப்படுத்தக்கூடியது. ஆனால் இது உணவில் அதிகம் சேர்க்கப்படும்போது அது உங்கள் உடலில் கலோரிகள் மற்றும் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது.

உலர் பழங்கள்

ஒரு கப் திராட்சையில் 400 கலோரிகளுக்கு மேல் இருக்கிறது.அதே போல ஒரு கப் முந்திரி பருப்பில் 500 கலோரிகளுக்கு மேல் இருக்கிறது. இதுபோல அனைத்து உலர்பழங்களுமே குறிப்பிட்ட அளவில் சாப்பிடும்போது மட்டுமே ஆரோக்கியமானதாக இருக்கும். அதிகமாக சாப்பிடும்போது பல பிரச்சினைகளை உண்டாக்கும்.

தேங்காய்

நம் அன்றாட உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்றால் அது தேங்காய்தான். இதில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க கூடியது. ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே அதிக கொழுப்பு இருந்தால் தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதை முற்றிலும் தவிர்க்கவும்.

செர்ரி

அதிக மக்கள் விரும்பும் இனிப்பான பழங்கள் என்றால் அவை செர்ரி தான். ஆனால் இதில் உள்ள ப்ராக்ட்டோஸ் என்னும் சர்க்கரை உடலில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும் வயதான அறிகுறிகளை முன்கூட்டியே ஏற்படுத்தக்கூடியது.

ப்ரோக்கோலி

மேலோட்டமாக பார்க்கும் போது ப்ரோக்கோலி ஒரு ஆரோக்கியமான காய்கறிதான். ஆனால் உங்கள் உடலில் வீக்கம் மற்றும் வாயுத்தொல்லைகள் ஏற்பட இதுதான் மூலகாரணம் என்று நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

English Summary

Fruits and vegetables are an important part of our daily diet. But some fruits and vegetables make some harmful effects on the body.