ஏழே நாட்களில் பத்து பவுண்ட் அளவுக்கு எடையைக் குறைக்கும் முட்டைகோஸ் சூப்

மிக ஆரோக்கியமான முறையில் வேகமாகவும் உடல் எடையைக் குறைக்கும் முட்டைகோஸ் சூப்பை பரிந்துரை செய்திருக்கிறோம். குடித்துப் பயன்பெறுங்கள்.


உடல் எடையை வேகமாகக் குறைக்கணும்னா என்னதான் பண்ணலாம்? அப்படினு யோசிக்கறதே உங்களோட பெரிய கவலையா இருக்கா? கவலைப்படாதீங்க. உங்களுக்கு இருக்கு ஒரு வரப்பிரசாதம்.

Advertisement

முட்டைகோஸ் சூப் உங்களோட இந்த கவலைக்கு நிச்சயம் கைகொடுக்கும். கிட்டதட்ட ஏழே நாட்களில் பத்து பவுண்ட் வரையிலும் உடல் எடையைக் குறைக்கும் அற்புதத்தைச் செய்கின்றது முட்டைகோஸ் சூப்.

Advertisement

நன்மைகள்

முட்டைகோஸ் சூப் டயட் மூலம் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவை என்னவென்றால், முட்டைகோஸ் சூப் டயட் என்பது, உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். உடல் ஆற்றல் அதிகரிக்கும். இந்த டயட்க்கு பெரிதாக செலவு எதுவும் இருக்காது. அதேசமயம் இந்த டயட்டை அதிக நாட்களும் பின்தொடரக் கூடாது. இந்த டயட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தீர்கள் என்றால், நோயெதிர்ப்பு சக்தி கொஞ்சம் குறையும். இது வெறும் 7 நாள் டயட் தான்.

முட்டைகோஸ் டயட்

இந்த முட்டைகோஸ் டயட் என்பது மிகக் குறைந்த காலகட்டத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு டயட் முறையாக இந்த டயட் முறை பரிந்துரை செய்யப்பட்டது. இந்த டயட் கடைபிடிக்கும்போது, தினமும் அரை மணி நேரம் அளவுக்கு உடற்பயிற்சி செய்வதும் மிக முக்கியம். அதன்மூலம் மிக வேகமாக எடை குறையும்.

எப்படி வேலை செய்கிறது?

முட்டைகோஸ் சூப் நம்முடைய உடலின் மெட்டபாலிசம் மற்றும் கொழுப்பைக் கரைக்கும் மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. இந்த டயட் முறையானது, சாதாரணமாக கலோரிகள் உட்கொள்ளும் அளவு குறையும். குறைந்த அளவு சோடியம், குறைந்த கலோரிகள் மற்றும் அதிக அளவிலான நார்ச்சத்து ஆகியவற்றைக் கொடுக்கிறது. 100 கிராம் சூப்புக்கு 20 கலோரிகள் அளவு தான்.

7 நாள் டயட் மெனு

இந்த முட்டைகோஸ் சூப் மொத்தம் ஏழு நாட்கள் மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முட்டைகோஸ் டயட்டை மேற்கொள்ளும் போது, சில உணவுகளை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த ஏழு நாள் மெனுவின் படி நடந்து கொள்ளுங்கள்.

முதல் நாள்

காலை உணவு - காலை உணவாக ஆப்பிள் போன்ற பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழம் மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

மதிய உணவு - ஒரு கப் முட்டைகோஸ் சூப்புடன் ஃபுரூட் சாலட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

இரவு உணவு - முட்டைகோஸ் சூப்பும் லெமன் சாலட்டும் சாப்பிட வேண்டும்

இரண்டாம் நாள்

காலை உணவு - பச்சை இலை காய்கறிகள் நிறைந்த சாலட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதிய உணவு - முட்டைகோஸ் சூப்பில் பல காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதில் பீன்ஸ், பட்டாணி, ஸ்வீட் கார்ன் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகளைச் சேர்க்கக்கூடாது.

இரவு உணவு - ஒரு கப் முட்டைகோஸ் சூப், அதனுடன் வேகவைத்த உருளைக் கிழங்கு, ஃபிரக்கோலி, தக்காளி ஆகியவற்றை சாப்பிடலாம்.

மூன்றாம் நாள்

காலை உணவு - ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் வாட்டர் மெலன் ஆகிய பழங்கள் சாப்பிடலாம். வாழைப்பழத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள்.

மதிய உணவு - முட்டை கோஸ் சூப்புடன் ஏதாவது ஸ்டார்ச் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

இரவு உணவு - உருளைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. முட்டைகோஸ் சூப் ஒரு கப்புடன் கிவி அல்லது பெர்ரி பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

நான்காம் நாள்

நான்காவது நாள் டயட்டில் மிக அதிகமாக சாப்பிடக் கூடாது.

காலை உணவு - நான்காவது நாள் காலையில் ஒரு வாழைப்பழமும் ஒரு கிளாஸ் பாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

மதிய உணவு - ஒரு கப் முட்டைகோஸ் சூப்பும் ஒரு கிளாஸ் வாழைப்பழ ஸ்மூத்தியும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இரவு உணவு - ஒரு கப் முட்டைகோஸ் சூப்புடன் ஒரு கப் யோகர்ட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாள் உணவில்,

காலை உணவு - பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு ஆகியவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.

மதிய உணவு - கிரில் செய்யப்பட்ட அல்லது வேகவைத்த சிக்கன் மற்றும் அதேபோல், பேக் செய்யப்பட்ட மீனை குறைந்த அளவு உப்பை மட்டும் போட்டு சாப்பிடுங்கள். அதேபோல் வேகவைத்த தானியங்களுடன் காளானுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

இரவு உணவு - ஒரு கப் முட்டைகோஸ் சூப்புடன் ஒரு பிளேட் தக்காளி சாலட் சேர்த்து சாப்பிடுங்கள்.

ஆறாம் நாள்

காலை உணவு - தினமும் காலையில் ஒரு ஆப்பிளுடன் இன்றைய நாளைத் தொடங்குங்கள். அதனுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறைக் கலந்து குடியுங்கள்.

மதிய உணவு - கிரில் செய்யப்பட்ட அல்லது வேகவைத்த சிக்கன் மற்றும் அதேபோல், புக் செய்யப்பட்ட மீனை குறைந்த அளவு உப்பை மட்டும் போட்டு சாப்பிடுங்கள். காரட் மற்றும் ஆனியன் சாலட் எடுத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த தானியங்கள், காளான், தக்காளி போன்ற நிறைய காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

இரவு உணவு - ஒரு கப் முட்டைகோஸ் சூப்புடன் ஒரு கப் பழங்கள் சாலட் சாப்பிடுங்கள்.

ஏழாம் நாள்

காலை உணவு - ஃபிரஷ்ஷான பழச்சாறுகளை காலையில் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மதிய உணவு - ஒரு கப் பிரௌன் அரிசியுடன் வேகவைத்த தானியங்கள், வேகவைத்த காய்கறிகள் சேர்த்து சாப்பிடுங்கள்.

இரவு உணவு - ஒரு கப் முட்டைகோஸ் சூப்புடன் வேகவைத்த மஸ்ரூம் சேர்த்து இரவு உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

English Summary

we suggest one healthiest Cabbage Soup Diet For Rapid Weight Loss in 7 days.