Hair Fall Remedies In Tamil: தலைமுடி உதிர்வு என்பது தற்போது நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான அதே சமயம் பலரது மனதை ஆழமான பாதிக்கும் பிரச்சனையாகும். தலைமுடி உதிர்வது ஒரு இயற்கையான செயல்முறை என்றாலும், அளவுக்கு அதிகமாக ஒருவருக்கு தலைமுடி உதிரும் போது, காலப்போக்கில் அந்த முடி உதிர்தலால் சிலருக்கு தலையில் வழுக்கை விழுந்து, ஒருவரது தன்னம்பிக்கையை குறைத்துவிடும்.

Advertisement

இந்த தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு கடைகளில் ஏராளமான தலைமுடி பராமரிப்பு பொருட்கள் விற்கப்பட்டாலும், பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தலைமுடி உதிர்வைத் தடுக்க நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். இப்போது தலைமுடி உதிர்வதைத் தடுக்க பழங்காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில வழிகளைக் காண்போம்.

Advertisement

1. நெல்லிக்காய் தேங்காய் எண்ணெய்

* இதற்கு ஒரு கப் தேங்காய் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் சில துண்டுகள் பிரஷ்ஷான அல்லது காய்ந்த நெல்லிக்காயை சேர்த்து சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கி குளிர வைத்து, வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை ஸ்கால்ப்பில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.

2. வெந்தய ஹேர் பேக்

* இந்த ஹேர் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அந்த பேஸ்ட்டை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு தலைமுடியை அலச வேண்டும்.

Advertisement

3. கறிவேப்பிலை எண்ணெய்

* இந்த எண்ணெய் தயாரிப்பதற்கு ஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் 1 கையளவு நற்பதமான கறிவேப்பிலையை சேர்த்து, மொறுமொறுவென்று வரும் வரை விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த எண்ணெயை வாரத்திற்கு 1-2 முறை தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, ஊற வைத்து எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.

4. வெங்காய ஜூஸ்

* தலைமுடி உதிர்வைத் தடுக்க பழங்காலம் முதலாக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் வெங்காய சாறு.
* அதற்கு வெங்காயத்தை அரைத்து சாறு எடுக்க வேண்டும்.
* பின் அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* ஆனால் இந்த வெங்காயத்தை பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்.

Advertisement

5. செம்பருத்தி ஹேர் மாஸ்க்

* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு சிறிது செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளை எடுத்து, நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை தேய்த்து அலச வேண்டும்.

6. கற்றாழை ஜெல்

* இதற்கு கற்றாழை செடியில் இருந்து நற்பதமான கற்றாழை ஜெல்லை எடுத்து, அதை நேரடியாக ஸ்கால்ப்பில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின் 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

Advertisement

7. முட்டை மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்

* இதற்கு ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)