Hair Care Tips In Tamil: தலைமுடி ஆரோக்கியமாக இருக்கவும், அதன் வளர்ச்சியை மேம்படுத்தவும் பல தலைமுறைகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் செம்பருத்தி. இந்த அழகான கண்களை பறிக்கும் நிறத்தைக் கொண்ட செம்பருத்தியில் வைட்டமின் சி, அமினோ அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தலைமுடிக்கு வேண்டிய பல சத்துக்கள் உள்ளன.
இச்சத்துக்கள் அனைத்தும் தலைமுடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகின்றன. இப்படிப்பட்ட செம்பருத்தி பூவை நாம் பலவாறு தலைமுடிக்கு பயன்படுத்தலாம். அதில் செம்பருத்தி எண்ணெய், செம்பருத்தி ஹேர் மாஸ்க், செம்பருத்தி ஹேர் பேக் போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீங்கள் தலைமுடி உதிர்வாலும், தலைமுடி அடர்த்தி குறைவாலும் சிரமப்படுகிறீர்களா? அப்படியானால் செம்பருத்தியை பின்வருமாறு பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.
1. தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய்
* இந்த எண்ணெய் தயாரிப்பதற்கு 8-10 செம்பருத்தி இலைகள், 4-5 செம்பருத்தி பூக்களை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் 100 மிலி தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் இந்த விழுதை சேர்க்க வேண்டும்.
* பின்பு அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர தலைமுடி நன்கு வளரும்.
2. தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்தும் செம்பருத்தி எண்ணெய்
* இதற்கு செம்பருத்தி பூக்களை எடுத்து, அதை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் சேர்த்து சில நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
* பின் அந்த எண்ணெயைக் கொண்டு ஸ்கால்ப்பில் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது கட்டுப்படுவதோடு, மயிர்கால்களை வலுவடைந்து, முடியின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.
3. செம்பருத்தி ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு நற்பதமான செம்பருத்திப் பூக்களின் இதழ்களை அரைத்து, அத்துடன் தயிர் அல்லது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப்பில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
4. செம்பருத்தி மற்றும் வெந்தய மாஸ்க்
* இதற்கு செம்பருத்தி பூக்களின் இதழ்களை அரைத்து, அத்துடன் வெந்தய பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க் பொடுகு தொல்லையில் இருந்து விடுவிப்பதோடு, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
5. செம்பருத்தி ஹேர் பேக்
* இதற்கு செம்பருத்தி பூ மற்றும் இலைகளை சிறிது எடுத்து அரைத்து, அத்துடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வர தலைமுடி வலுவடைவதோடு, தலைமுடியும் மென்மையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
More Articles
- தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க..
- தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க..
- வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..
- தலைமுடி ஆரோக்கியமா, அடர்த்தியா வளரணுமா? அப்ப கிச்சனில் உள்ள இந்த நேச்சுரல் ஷாம்புக்களை ட்ரை பண்ணுங்க..
- அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா?
- வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய் - இவற்றில் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்தது எது?