Monsoon Hair Care Tips In Tamil: மழைக்காலம் வந்துவிட்டாலே தலைமுடியில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக தலைமுடி அதிகமாக வறண்டு போகும். நீங்களும் அப்படி வறண்ட தலைமுடியால் அவதிப்படுகிறீர்களா? இந்த முடி வறட்சியைப் போக்க கடைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த தலைமுடி பராமரிப்புக்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா? இருப்பினும் இயற்கை தீர்வுகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு வாழைப்பழம் பெரிதும் உதவி புரியும்.

Advertisement

வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த வாழைப்பழத்தைக் கொண்டு ஹேர் மாஸ்க் போடும் போது, ஒரு டீப் கண்டிஷனர் பயன்படுத்தியது போன்ற தீர்வைத் தரும். அதுமட்டுமின்றி, தலைமுடி மென்மையாகவும், பளபளவென்றும் இருக்கும். கீழே தலைமுடி வறட்சியைப் போக்க வாழைப்பழத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஹேர் மாஸ்க் போடலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

1. வாழைப்பழம் மற்றும் தேங்காய் பால் ஹேர் கண்டிஷனர்

* இதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை நன்கு அரைத்து, அத்துடன் 3-4 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியின் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

2. வாழைப்பழம் மற்றும் தேன் ஹேர் கண்டிஷனர்

* இதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் தலைமுடியை நீரில் நனைத்து, அதன் பின் அதை தலைமுடியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

Advertisement

3. வாழைப்பழம் மற்றும் தயிர் ஹேர் கண்டிஷனர்

* இதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

4. வாழைப்பழம் மற்றும் கற்றாழை ஹேர் கண்டிஷனர்

* இதற்கு நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

Advertisement

5. வாழைப்பழம் மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் கண்டிஷனர்

* இதற்கு நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)