குடிக்கும் ஒயினை கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா...! புதிய ஒயின் அழகியல் முறைகள்..!


நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல வித நன்மைகள் இருக்கும். அன்றாடம் செய்யும் செயலுக்கும் நாம் பயன்படுத்தும் சிறு பொருளுக்கும் கூட எண்ணற்ற ஒற்றுமைகள் இருக்கும். எடுத்துக்காட்டாக, நாம் சாப்பிடும் உணவு வகைகளை பல்வேறு முறையில் பயன்படுத்தலாம். அதாவது இவற்றை சாப்பிடவும், அழகை மேம்படுத்தவும், மருத்துவத்திலும்... இப்படி வெவ்வேறு வகைகளில் உபயோகித்து கொள்ளலாம்.

அந்த வகையில் நாம் குடிக்க பயன்படுத்தும் ஒயினில் பலவித நன்மைகளை நாம் அறியாமலே இருக்கின்றோம். ஒயினில் உள்ள அழகியல் நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிவப்பு ஒயின்

ஒயினில் எண்ணற்ற நலன்கள் இருப்பதாக மருத்துவர்களும் கூறுகின்றனர். இவற்றில் உள்ள டார்ட்டாரிக் அமிலம் செல்களை தூண்டி உடலின் நலனை பாதுகாக்கிறது. ரிபோபிளவின் என்ற முக்கிய மூல பொருள் இதில் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இளமையை பாதுகாக்கும். அளவான அளவில் இதனை எடுத்து கொண்டால் நன்மையே நடக்கும்.

முகத்திற்கு சிவப்பு ஒயின் நல்லதா..?

ஒரு சில முக்கிய பானங்களே முக அழகிற்கு உதவும். அந்த வகையில் சிவப்பு ஒயின் ஊட்டசத்துக்களை நிரம்பி வைத்துள்ளது. இவற்றை முகத்தில் பயன்படுத்தினால் பல வகையான நன்மைகள் முகத்திற்கு கிடைக்கும். முக சுருக்கம், முக வறட்சி, அரிப்புகள், மங்கிய தோல் போன்றவை இவற்றால் குணமாகும்.

இளமைக்கு ஒயின் போதுமே..!

பலவித ஆராய்ச்சிகளும் இதை தான் சொல்கிறது. ஒயினை முகத்தில் பூசினால் அது முகத்தின் சுருக்கங்களை போக்கி, இளமையான தோலை தருமாம். மேலும் இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலின் உள்ள செல்களை மறு உற்பத்தி செய்து நீண்ட ஆரோக்கியத்தை தரும்.

முக பருக்களுக்கு டாட்...!

முகப்பருக்களை ஒரே அடியாக போக்குவதற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும், இந்த முறை சற்றே சிறந்ததாகும். முகத்தின் முழு அழகையும் கெடுக்கும் பருக்களை நீங்குவதற்கு, முகத்திற்கு ஒயின் குளியலை பயன்படுத்துங்கள். இது நல்ல பலனை தருமாம்.

பொலிவான முகத்திற்கு

ஒயின் குடித்து வந்தால் முகம் அதிக பொலிவாக மாறும். அதோடு, முகத்தின் கருமை நிறத்தை நீக்கி எண்ணற்ற அழகியல் நலன்களை இது தரும். சருமத்தின் மங்கலான தன்மையை இவை குணப்படுத்துகின்றன. மேலும், சூரியனிடம் இருந்து வரும் UV கதிர்களின் தாக்கத்தையும் இந்த ஒயின் தடுக்குமாம்.

முடி உதிர்வை தடுக்க...

முடி உதிர்ந்து, அந்த இடத்தில சொட்டை விழுவது பலருக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதனை சரி செய்ய ஒரு அருமையான தீர்வு இதுதான். உங்கள் முடியை ஒயினால் அலசி, பிறகு தலைக்கு குளித்தால் முடி உதிர்வு பிரச்சினை தீரும். அத்துடன் கொட்டிய இடத்தில முடிகள் வளருமாம்.

அடர்த்தியான முடியிற்கு...

உங்களின் முடி மிகவும் அடர்த்தியாக வளர வேண்டும் என்றால் அதற்கு சிறந்த தீர்வு ஒயின்தான். முடியின் ரத்த ஓட்டத்தை நன்கு அதிகரித்து இறுக்கமான முடிகளை உருவாக்கும். மேலும் முடியின் அடர்த்தியை இவை அதிகரித்து போஷாக்கான தலைமுடி பெற செய்யும்.

ஒயின் ஸ்பா...

ஒயினை குளிக்கும் பாத்திரத்தில் ஊற்றி கொண்டு அதில் குளியல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உங்களின் உடல் செல்கள் புத்துணர்வு பெறுமாம். இந்த முறையையே ஒயின் ஸ்பா என்று முக பூச்சு கடைகளில் செய்கிறார்கள். இவற்றின் விலை தன்மைக்கு ஏற்ப மாறுபடும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒயின் தெரப்பி தெரியுமா..?

ஒயினை கொண்டு செய்யப்படும் சிகிச்சையே ஒயின் தெரப்பியாகும். இது உடல் முழுவதும் அழகிய பொலிவை தந்து, நீண்ட கால இளமையை உருவாக்கும். தோலின் சுருக்கங்களை நீக்கவும், வயதாவதை தடுக்கவும் இந்த ஒயின் தெரப்பியை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

Read More About: beauty facial face hair care

Have a great day!
Read more...

English Summary

Drinking red wine and using it, gives many benefits.