Solar Eclipse 2026: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணமானது ஆகஸ்ட் மாதத்தில் நிகழவுள்ளது. அதுவும் இந்த சூரிய கிரகணமானது ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால், சூதக் காலம் செல்லுபடியாகாது. ஆயினும் ஜோதிடத்தின் படி, கிரகணமானது ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.
முக்கியமாக சூரிய கிரகணமானது ஒரு சிறப்பு கிரக சேர்க்கையினால் நிகழ்கிறது. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும்.
அதுவும் சிறு வேலைகளை கூட செய்ய அதிக முயற்சி தேவைப்படலாம் மற்றும் வேலைகளில் தடைகளை சந்திக்கலாம். இப்போது 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்கார்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தால் கடக ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். எந்த ஒரு புதிய விஷயங்களையும் மேற்கொள்ளும் முன் அனுபவசாலிகளின் ஆலோசனையை பெறுவது நல்லது. செலவுகள் அதிகரித்து உங்களின் பட்ஜெட்டை பாதிக்கும். இக்காலத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை தள்ளிப் போடுவது நல்லது.
சிம்மம்
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். நீதிமன்ற வழக்குகளில் இருந்து நிவாரணம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். எந்த ஒரு புதிய முயற்சியை தொடங்கும் முன்பும், அன்புக்குரியவர்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது. பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண விஷயங்களில் அவசரப்பட்டு முடிவெடுக்காமல், நன்கு யோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தால் கன்னி ராசிக்காரர்கள் வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்காமல் போவது மிகுந்த வருத்தத்திற்கு ஆளாக்கும். இக்காலத்தில் யாருடனும் சண்டை போடுவதைத் தவிர்க்க வேண்டும். தொழிலில் பல தடைகளை சந்திக்கக்கூடும். எந்த ஒரு வேலையிலும் அலட்சியத்தை தவிர்த்து, பொறுமையாக செயல்பட்டால், பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
More Articles
- சூரிய கிரகண நாளில் நிகழும் சந்திரனின் இரட்டை பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
- Solar Eclipse 2026: ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
- சனிபகவானின் ராசியில் நடக்கும் சூரிய கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரங்களுக்கு வெற்றிகள் குவியப்போகுதாம்...!
- 2026-ன் முதல் சூரிய கிரகணம் தொடங்கும் நேரம் என்ன? இந்த அதிசய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியுமா?
- சூரிய கிரகண நாளில் உருவாகும் பஞ்சகிரக ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
- 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: இந்த 5 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க..