சூரிய கிரகணம் என்பது அவ்வப்போது நிகழும் ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். சூரிய கிரகணம் ஒரு முக்கியமான வானியல் நிகழ்வு மட்டுமல்ல, ஜோதிடரீதியாகவும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2026-ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 அன்று நிகழவுள்ளது. இது இந்தியாவில் தெரியாது என்பதால், 'சூதக்' காலம் கடைப்பிடிக்கப்படாது. இருப்பினும், இந்த வானியல் நிகழ்வின்போது ஏற்படும் கிரகங்களின் அமைவு காரணமாக, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு சோதனையான காலகட்டமாக இருக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் தென்படலாம், ஆனால் சட்ட, பணியிட மற்றும் குடும்ப விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் எழக்கூடும். அதே வேளையில், உங்கள் வரவு செலவுத் திட்டம் தடம் புரள வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அவர்கள் வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் கடுமையான அதிருப்தி அடையலாம். தனுசு ராசிக்காரர்கள் தற்போதைய நிலையில் வாழ்க்கையின் அனைத்து முயற்சிகளிலும் தோல்வியை சந்திக்கலாம். சில தேவையற்ற காரணங்களுக்காக, அவர்கள் வேலைகளை மாற்ற வேண்டியிருக்கலாம். வேலையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் தனுசு ராசிக்காரர்களின் கவலைகளை அதிகரிக்கும். இந்த நேரத்தில் அவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனும் குறைவாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நிலையான முன்னேற்றம் இருந்தபோதிலும் வேலை மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் தாமதத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் திட்டமிட்டபடி காரியங்களை முடிக்க முடியாது, மேலும் பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவர்களைத் தேடி வரும். அவர்களின் கடின உழைப்பிற்கான பலன் மற்றவர்களுக்கு செல்வது மட்டுமின்றி, பொருளாதாரரீதியாகவும் பின்னடைவுகளை சந்திப்பார்கள்.
ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் முயற்சி செய்வதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் அது உங்களின் துரதிர்ஷ்டத்தை மேலும் அதிகமாக்கும். தொழில் வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் இது சோதனையான காலகட்டமாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படலாம், பொறுமையாக இருக்கவில்லை என்றால் இது தற்காலிக பிரிவுக்கு வழிவகுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இக்காலகட்டத்தில் தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த விஷயங்களைக் கையாளும்போது பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். இந்த சூரிய கிரகணத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில், அவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், மேலும் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும்.
அவர்களுக்குகள் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். மொத்தத்தில் அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
More Articles
- நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
- 1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
- சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்..
- ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்!
- ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது..
- கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?