Shani Mangal Yog On 03 August 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெயில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் சேர்ந்தோ அல்லது நிலைகளின் மூலமோ சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Advertisement

அந்த வகையில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் நீதிமான் சனி பகவானும், தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் மற்றும் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும் சேர்ந்து ஆகஸ்ட் 03 ஆம் தேதி சனி மங்கள யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த மங்களகரமான யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.

Advertisement

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல செல்வத்தைப் பெறுவதோடு, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறவுள்ளனர். இதன் விளைவாக வெற்றிகள் குவிந்து, வாழ்வில் நல்ல உயரத்தை அடையவுள்ளனர். இப்போது சனி செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் சனி மங்கள யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்

சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் உருவாகும் சனி மங்கள யோகமானது மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. குறிப்பாக திடீரென்று பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Advertisement

மகரம்

சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் உருவாகும் சனி மங்கள யோகம் மகர ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. வேலை தொடர்பாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள நேரிடும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத அளவில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

Advertisement

விருச்சிகம்

சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் உருவாகும் சனி மங்கள யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட கால ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக நிதி நிலைமை வலுவடையும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)