Saturn Moon Make Vish Yog In August 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். கடக ராசியின் அதிபதியான சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை பயணிப்பார். இப்படி குறுகிய காலத்தில் ராசியை மாற்றுவதால் சந்திரன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து அடிக்கடி சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

Advertisement

அந்த வகையில் சந்திரன் ஆகஸ்ட் 02 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த மீன ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார். இதனால் இந்த சந்திர பெயர்ச்சியால் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இந்த விஷ யோகமானது ஆகஸ்ட் 04 ஆம் தேதி வரை நீடித்திருக்கும்.

Advertisement

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் மிகுந்த மன அழுத்தம், குழப்பம், பிரச்சனை போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். அதுமட்டுமின்றி வேலையிலும் தடைகளை சந்திக்கக்கூடும். இப்போது சனி சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி-சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆரோக்கிய பிரச்சனையால் சிரமப்படக்கூடும். எனவே ஏற்கனவே ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் மதிப்புமிக்க பொருட்கள் சேதமடையவோ அல்லது காணாமல் போகவோ வாய்ப்புள்ளது.

Advertisement

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சனி-சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். உறவுகளில் தவறான புரிதலை அதிகரிக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும். இதனால் தவறுகளை செய்யக்கூடும். தேவையற்ற பணச்செலவை அதிகம் சந்திக்க நேரிடும். இதனால் நிதி பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி-சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது.இதனால் பணப் பிரச்சனைகளால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஏற்கனவே கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பி செலுத்த வேண்டிய அழுத்தம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்திலும், பெற்றோரின் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் பயணங்களின் போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)