ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் தைரியம், ஆற்றல் மற்றும் போரின் கடவுளாக கருதப்படுகிறார். எனவே செவ்வாயின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Advertisement

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலேயே செவ்வாய் தனது ராசியை மாற்றப்போகிறார். ஆகஸ்ட் 02 ஆம் தேதி புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்குள் நுழையப்போகிறார். ஜோதிடரீதியாக இது மிகவும் முக்கியமான கிரக மாற்றமாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் முக்கியமான காலமாக இருந்தாலும் இந்த காலத்தில் சில ராசிக்காரர்கள் அற்புதமான காலகட்டத்தை அனுபவிப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

மேஷம்

மேஷ ராசியின் அதிபதியாக செவ்வாய் இருப்பதால் இது அவர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள் தாங்கள் கடன் கொடுத்த பணத்தை மீட்டெடுக்கலாம் மற்றும் சேமிப்பை குறிப்பிட்ட அளவை உயர்த்த முடியும். இந்த காலகட்டத்தில் சமூகத்தில் அவர்களின் மரியாதையும், நற்பெயரும் அதிகரிக்கும். அவர்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட முடியும், மேலும் அவர்களின் முயற்சிகள் பணியிடத்தில் பாராட்டப்படும்.

வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் பல்வேறு முதலீடுகளிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்கலாம். அவர்களின் நீண்டகால ஆசைகள் அனைத்தும் இப்போது நிறைவேறும். திருமண வாழ்க்கையில், மகிழ்ச்சி இருக்கும். ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.

Advertisement

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதியாக புதன் இருப்பதால் இந்த கிரகப் பெயர்ச்சி அவர்களுக்கு நேர்மறையானப் பலன்களை அளிக்கப்போகிறது. இந்த ராசி மாற்றத்தால் அவர்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் முன்னேற்றத்தையும், நேர்மறையான மாற்றங்களையும் அனுபவிப்பார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும்.

மேலதிகாரிகளிடமிருந்து முழு ஆதரவை எதிர்பார்க்கலாம், மேலும் அவர்களின் கடின முயற்சி அனைவராலும் அங்கீகரிக்கப்படும். உங்கள் கடந்த கால வேலைகள் இப்போது சிறந்த பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் சில பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன, மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை நேரத்தை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்.

Advertisement

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இது மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சியால் வணிகர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம், மேலும் வேலையில் இருப்பவர்கள் தங்கள் அலுவலகத்தில் உயர் பதவிகளைப் பெறலாம். திருமண வாழ்க்கையில், இருந்துவந்த பிரச்சினைகளை இப்போது சரிசெய்யலாம், மேலும் உங்கள் துணையுடனான உறவு வலுவடையும்.

நீதிமன்றம் அல்லது சட்ட சிக்கல்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் வெற்றியைப் பெறலாம். வீடு, சொத்து அல்லது வாகனம் வாங்குவதற்கு இந்தக் காலம் சாதகமானது. இந்த காலகட்டத்தில் வணிகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இது அவர்களின் லாபத்தை அதிகரிக்கும்.

Advertisement

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் செவ்வாயின் ராசி மாற்றத்தால் பல நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மற்றும் சவாலான பணிகள் இந்த காலகட்டத்தில் சரியாக முடிக்கப்படும். இது அவர்களுக்கு வெற்றிகரமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையைத் தரப்போகிறது.

வெளிநாட்டில் படிக்க விரும்புவோர் இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகளைப் பெறலாம், ஏனெனில் இந்த காலம் அறிவுசார் நோக்கங்களையும் சர்வதேச பயண வாய்ப்புகளையும் ஊக்குவிக்கிறது. இந்த காலகட்டத்தில் பொதுவாக மாணவர்கள் கல்வியில் குறிப்பிடத்தக்க சாதனையை எதிர்பார்க்கலாம், இது கல்வி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த காலகட்டமாக இருக்கும்.