ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. அதேசமயம் சில கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து சக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகம் ஆகஸ்ட் 02-ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்து, ராகுவுடன் இணைந்து 'நவபஞ்சம ராஜயோகத்தை' உருவாக்கியுள்ளது.

Advertisement

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த அரிய கிரகக் கூட்டணி செப்டம்பர் 18, 2026 வரை நீடிக்கும். இந்த காலகட்டம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றாலும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அபரிமிதமான நன்மைகளை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

மேஷம்

செவ்வாய் கிரகம் மேஷ ராசியை ஆளும் கிரகமாக இருப்பதால், இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த யோகம் மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. இந்தக் காலத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், தொழில் வாய்ப்புகள் மேம்படவும், குறிப்பாக முதலீடுகள் அல்லது பங்குச் சந்தை வாயிலாக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி ஆதாயங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இது அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும் காலமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் அவர்களின் துறையில் பெரிய சாதனைகளை செய்ய முடியும். அவர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள், அதன் மூலம் வெற்றியை அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கும்.

Advertisement

இந்த காலகட்டத்தில் அவர்களின் நீண்ட கால இலக்குகளை அடைய முடியும். வியாபாரிகளுக்கு சில பெரிய ஆர்டர்கள் அவர்களைத் தேடி வரும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு அவர்களுக்கு பொருத்தமான துணை கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்கள் வரும். இது பொதுவாக வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டங்களில் ஒன்றாக இருக்கும்.

மிதுனம்

செவ்வாய் கிரகம் மிதுன ராசிக்குள் நுழைவதால், இந்த ராசியினர் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும் கூர்மையான முடிவெடுக்கும் திறனையும் பெறக்கூடும். இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். இந்த யோகத்தால் அவர்கள் வேலை மற்றும் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். அவர்களின் பொருளாதார நிலை மேம்படலாம் மற்றும் வேலையில்லாதவர்கள் விரும்பிய வேலைகளை எதிர்பார்க்கலாம்.

Advertisement

அதே நேரத்தில், வணிகர்கள் பல்வேறுபுதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது சரியான காலகட்டமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் புதிய வேலையில் சேர விரும்பினால், எந்த பிரச்சினையும் இல்லாமல் புதிய வேலையில் சேரலாம். செவ்வாயின் பெயர்ச்சி உறவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், சகோதர சகோதரிகளுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும். இந்த யோகத்தால் பல சொத்துக்களை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

துலாம்

துலாம் ராசியினருக்கு, இந்த ராஜயோகம் அவர்களின் வேலை மற்றும் வணிகத் துறைகளில் புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. இந்த கிரகப் பெயர்ச்சியின் போது பணியில் புதிய பொறுப்புகள், வலுவான நிதி நிலை மற்றும் எதிர்பாராத பண வரவு போன்ற நேர்மறையான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களைக் கொண்டுவரும். அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும்.

Advertisement

திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.